/tamil-ie/media/media_files/uploads/2019/11/template-11.jpg)
1.75 crore penalty on Indian Bank
RBI Fines Indian Bank : இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக, இந்தியன் வங்கிக்கு ரூ.1.75 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் தலைமையகமாக இந்திய ரிசர்வ் வங்கி உள்ளது. வங்கிகளின் செயல்பாடு, நிர்வாகம் உள்ளிட்டவைகளை கண்காணித்து மக்களுக்கு சிறந்த நிதிச்சேவைகளை அளிக்கும் பொருட்டு, இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. அந்த விதிமுறைகளின்படியே, நாட்டின் அனைத்து வங்கிகளும் செயல்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியன் வங்கி, ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு முரணாக செயல்பட்டதாக, அந்த வங்கிக்கு ரூ..1.75 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சொசைட்டிகளுக்கு, வங்கி சேமிப்பு கணக்குகளை துவக்கியது, வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் ( Know Your Customer) பிரிவிலான விதிகளை பின்பற்றாமை, பண மோசடி தடுப்பு நடவடிக்கைகளுக்கான விதிகளுக்கு முரணாக செயல்பட்டது, 2018 மார்ச் 31ம் தேதி கணக்கின்படி, ரூ.508.28 கோடி அளவிற்கு கடன் வழங்கியது மற்றும் வங்கியின் நிதி நிர்வாகத்தில் நிகழ்ந்த முறைகேடுகளை காலம் தாழ்த்தி அறிவித்தது உள்ளிட்ட விதிகளை மீறிய நடவடிக்கைகளால், இந்த அபாரதம் விதிக்கப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.