பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்வது என்று பலருக்கும் குழப்பம் இருக்கும். ஓய்வூதியம் பெறாமல் இருக்கும் நபர்கள், மாத சம்பளத்திற்கு வேலைக்கு செல்லும் நபர்கள், அமைப்பு சாரா தொழிற்துறையில் பங்காற்றும் நபர்களுக்கு 60 வயதிற்கு மேல் என்ன செய்வது என்ற தவிப்பு இருக்கத்தான் செய்யும். உங்களின் ஓய்வு காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உங்களின் 30-களில் திட்டமிடுங்கள்.
மேலும் 30:30:30:10 என்ற விகிதத்தில் அனைத்தையும் தீர்மானிக்க துவங்குங்கள். 30% உங்களின் குழந்தைகள்/குழந்தையின் எதிர்காலத்திற்கு; 30% உங்களின் எதிர்காலத்திற்கு (பண வீக்கம், புழக்கம் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க); 30% உங்களின் ஓய்வு நாட்களை நீங்கள் நினைத்தது போல வாழ… பிறகு இருக்கும் 10% அவசர தேவைக்காக.
உங்கள் குழந்தைகளுக்காக 30% என்பது பங்குகளாக இருக்க வேண்டும். உங்களின் செலவுக்கான 30% என்பது பங்குகள் மற்றும் கடன்களாகவும் இருக்கலாம்; ஓய்வு நாட்களை நினைத்தது போல வாழ, வருமானத்தை தாங்கும் வகையில் கடன்களாக இருக்கலாம். அவசர தேவைக்கான 10% என்பது எப்போது வேண்டுமானாலும் விற்கவோ அல்லது அடமானம் வைக்கவோ ஏதுவான சொத்து மதிப்புகளாக இருத்தல் அவசியம். இதில் வீட்டினை இணைக்க வேண்டாம்.
அனைத்து பன்முகப்படுத்தப்பட்ட, நல்ல தரமான, நன்கு இயங்கும் நிதி, பங்குகள், வங்கி வைப்பு, கடன் மற்றும் திரவ நிதி என முதலீடுகளில் அதிக கவனம் செலுத்துங்கள். என்ன நடக்கிறது என்பதை தொடர்ந்து கண்காணிக்க விரும்பாத ஒரு ஓய்வு பெற்றவருக்கு டிராக் ரெக்கார்ட் மற்றும் மேலாண்மை தரம் முக்கியம்.
உங்களின் குழந்தைகளுக்கு நல்ல வேலை கிடைத்துவிட்ட சூழலில் இந்த சேமிப்பு தொகையில் உங்களின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம். ஆண்டுக்கு வரும் கார்ப்பஸில் 3 முதல் 4% நிதியை நீங்கள் செலவு செய்தாலும் மீதம் இருக்கும் நிதியை உங்களின் குழந்தைகளால் திறம்பட பங்கு சந்தைகளில் முதலீடு செய்து அவர்களுக்கு தேவையான வருமானத்தை ஈட்டிக் கொள்ள இயலும்.
இப்போது நீங்கள், உங்களுக்கு தேவையானதை வாங்க என்ன இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பலாம். நீங்களும் உங்களின் துணை மட்டுமே சென்னை போன்ற ஒரு மாநகரில் ஒரு பெரிய ஃப்ளாட்டில் தங்கியிருக்கின்றீர்கள் என்றால், உங்களின் வருங்கால சந்ததியினர் அதனை பராமரிக்கவோ அல்லது அங்கு வந்து தங்கவோமாட்டார்கள் என்று நீங்கள் நினைத்தால், நல்ல மதிப்பிற்கு அதனை விற்றுவிட்டு உங்களின் சொந்த ஊர்களில், கிராமங்களில் இருவர் மட்டும் தங்கும் அளவில் வீடுகளை வாங்கிக் கொள்ளலாம். இது நிச்சயமாக உங்கள் வங்கிக் கணக்கில் ஒரு கணிசமான தொகையை மிச்சப்படுத்தும். உங்களுக்கு பிடித்த பல விசயங்களை செய்ய இது கட்டாயம் உதவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil