அரிசி தவிடுக்கு இவ்வளவு டிமாண்டா? காரணம் இதுதான்!

Rice bran becomes popular commodity as India seeks for edible oils Tamil News: அரிசி தவிடு எண்ணெய்யின் விலை குறையாவிட்டாலும், மற்ற சமையல் எண்ணெய்யுடன் ஒப்பிடும்போது விலை குறைவு உள்ளது. இதனால், இவற்றின் விற்பனை தற்போது சூடுபிடித்து வருகிறது.

Rice bran now becomes a hot commodity in India Tamil News
Rice bran Tamil News

Rice bran  becomes demanding commodity in india Tamil News: உலகில் பலம் பொருந்திய நாடாக வலம் ரஷ்யா அதன் அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி முதல் படையெடுத்து போர் நடத்தி வருகிறது. இதனால் அந்நாட்டின் மீது அமெரிக்க, கனடா, ஐரோப்பியா, மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளன. இந்த தடை உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது.

சர்வேதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்வால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அத்தியவாசி பொருட்களின் விலை உயர்ந்துவரும் நிலையில், பொதுமக்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதேபோல், நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கமும் மக்களை திண்டாட செய்துள்ளது.

பெட்ரோல் – டீசல் விலையில் மத்திய – மாநில அரசுகள் வரி உயர்வை விலக்கி இருந்தாலும், அவற்றின் விலை அதிகரித்த வண்ணம் தான் இருக்கிறது. இதை காரணம் காட்டி அத்தியாவசிய பொருட்களான சமையல் பொருட்கள், காய்கறிகள், முட்டை, பால் முதலியவற்றின் விலை நாளுக்கு நாள் உயர்த்தப்பட்டு வருகிறது. இவற்றுடன், கோதுமை, அரிசி போன்றவற்றிலும் பற்றாக்குறை நிலவி வருகிறது. இது மக்களுக்கு மேலும் சுமையை அதிகரிக்க செய்துள்ளது.

இந்நிலையில், தற்போது நெல் அரிசியில் இருந்து பெறப்படும் தவிடுற்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அது ஏன் தவிடுக்கு தட்டுப்பாடு? என்கிற கேள்வி நிச்சயம் எழும். அதற்கான பதிலை இங்கு தொடர்ந்து பார்க்கலாம்.

தற்போது உலகளவில் சமையல் எண்ணெய் தயாரிப்பு மற்றும் விநியோகம் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாக உலகிலேயே அதிகப்படியாக சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவில் பாமாயில் முதல் அனைத்து வகையான சமையல் எண்ணெய்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனைச் சமாளிக்க மத்திய அரசு சமையில் எண்ணெய் இறக்குமதி மீதான வரியை குறைத்தது. ஆனாலும் சப்ளை செயின் பாதிப்பால் மீண்டும் எண்ணெய்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த பற்றாக்குறையை போக்க சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் தற்போது மாற்றுத் திட்டம் ஒன்றைக் கையில் எடுத்துள்ளன. அதன்படி, அரிசி தவிட்டில் இருந்து எண்ணெயைப் பிரித்தெடுக்கத் தொடங்கியுள்ளன. அரிசி மில்களில் முக்கிய உற்பத்தி பொருள் அரிசியாக இருந்தாலும், அரிசி தவிடு மிக முக்கிய துணை தயாரிப்பாக இருந்து வருகிறது. இவை, பொதுவாகவே கால்நடைகள் மற்றும் கோழி தீவனத்திற்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சமையல் எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைகள் அரிசி தவிட்டில் இருந்து எண்ணெயைப் பிரித்தெடுத்து வருகின்றன. இதை “ரைஸ் பிரான்ட் ஆயில்” என்றும் சந்தைப்படுத்தி விற்கப்படுகிறது. இந்த எண்ணெய் ஆரோக்கியம் மீது அதிக ஆர்வம் கொண்ட மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. அதேசமயம், இவை மற்ற சமையல் எண்ணெயைக் காட்டிலும் விலை அதிகமாகவே இருந்ததால் குறைந்த அளவிலான மக்களே வாங்கினர். ஆனால் தற்போது இதன் ப்ரீமியம் நிலைமை முற்றிலும் மாறியுள்ளது.

இந்த அரிசி தவிடு எண்ணெய்யின் விலை குறையாவிட்டாலும் மற்ற சமையல் எண்ணெய்யுடன் ஒப்பிடும்போது விலை குறைவு உள்ளது. இதனால், இவற்றின் விற்பனை தற்போது சூடுபிடித்து வருகிறது. எனவே, அரிசி தவிடுக்கும் அதிக டிமாண்டாட் ஏற்பட்டுள்ளது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Rice bran now becomes a hot commodity in india tamil news