தமிழ்நாட்டில் இம்மாதம் தொடக்கத்தில் இருந்தே அரிசியின் விலை தொடர்ச்சியாக மெல்ல அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நெல் வரத்து குறைவால் மாநிலத்தில் அரிசி விலை கிலோவிற்கு ரூ.2 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் நெல் ஏற்றுமதியும் சரிந்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் சக்திவேல் இது தொடர்பாக விளக்கமளித்து பேசினார்.
அதில், “ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து பொன்னி ரகங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அந்த ரகங்களை அவர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால், வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்துள்ளது” என்றார்.
இதற்கிடையில் தஞ்சசையை சேர்ந்த மற்றொரு வியாபாரி கூறுகையில், “கர்நாடகாவில் 10 கிலோ அரிசி கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் பெருமளவு அரிசி அங்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விலை ஏற்றத்துக்கு காரணம். ஆகவே விலை ஏற்றம் தொடரும் எனத் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“