/indian-express-tamil/media/media_files/2025/05/05/WXm0Ox8KrUqbMpjeqmvr.jpg)
கடந்த 4 மாதங்களில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 23 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கூட 10 கிராம் தங்கம் ரூ. 10 லட்சத்தை தாண்டியதாக செய்திகள் வெளியானது. இந்த சூழலில் சில பொருளாதார நிபுணர்கள் தங்கத்தின் விலை ரூ. 2 லட்சம் வரை தொடும் என்கின்றனர். ஆனால், வேறு சிலர் தங்கத்தின் விலை ஏறத்தாழ 38 சதவீதம் சரிவை சந்திக்கும் என்று கூறுகிறார்கள்.
இதனால், தங்கம் வாங்குவதில் நடுத்தர மக்களுக்கு பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் இருக்கும். அதற்கான விடையை இந்த செய்திக் குறிப்பில் விரிவாக பார்க்கலாம். அதனை அறிந்து கொள்வதற்கு நாம் சில தகவல்களை தெரிந்து கொள்வது அவசியம்.
அதன்படி, கடந்த 2012-ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 31,050-ஆக இருந்தது. இதே விலை படிப்படியாக குறைந்த 2015-ஆம் ஆண்டில் சுமார் ரூ. 26,000 வரை குறைந்தது. இந்த விலை 2018-ஆம் ஆண்டில் ரூ. 38,000 வரை உயர்ந்தது. அதற்கு பின்னர், தங்கத்தின் விலை உயர்வை மட்டுமே கண்டுள்ளது.
எனவே, தங்கத்தில் முதலீடு செய்வதற்கு நாம் யோசிக்க வேண்டிய அவசியம் கிடையாது. உக்ரைன் - ரஷ்யா போர், அமெரிக்காவின் கடுமையான வரி விதிப்பு போன்றவை தங்கம் விலை உயர்வின் ஒரு காரணியாக பார்க்கப்படுகிறது. சில நாடுகளில் நிலையற்ற தன்மை உருவாகும் போது, அந்நாட்டு மக்கள் தங்கள் பணத்தை தங்கமாக வாங்கி வைத்துக் கொள்வார்கள். தங்களின் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய இது போன்று செயல்படுகின்றனர்.
இதனிடையே, கடந்த 4 ஆண்டுகளில் நகை வடிவத்தில் தங்கத்தை வாங்கும் சதவீதம் குறைந்து விட்டது. அதற்கு பதிலாக இ.டி.எஃப் வடிவத்தில் தங்கத்தில் முதலீடு செய்வதில் பெரும்பாலானவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதனடிப்படையில், நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். தங்கத்தி விலை அதிகரிக்கிறது என்ற காரணத்திற்காக மொத்த பணத்தையும் அதில் மட்டுமே முதலீடு செய்வது என்பது சரியான முடிவாக இருக்காது.
அந்த வகையில், தங்கம், பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் போன்றவற்றில் பணத்தை பிரித்து முதலீடு செய்யலாம் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே, தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள், அதன் விலை குறைந்து இருக்கும் போது சிறுகச் சிறுக வாங்கிக் கொள்ளலாம். மொத்த தங்க விலை குறைந்த பின்னர் மட்டுமே வாங்க வேண்டும் என்று காத்திருக்க வேண்டாம்.
நன்றி - Boss Wallah (Tamil)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.