ஆயுள் காப்பீட்டில் உத்தரவாதமான வருமானத் திட்டமானது, முன் வரையறுக்கப்பட்ட அட்டவணை மற்றும் பாலிசிதாரருக்கு வழங்கப்படும் குறிப்பிட்ட தொகையுடன் வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வருமானமானது, காப்பீட்டாளருக்கு மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர அடிப்படையில் வழங்கப்படலாம்.
காலக் காப்புறுதி (டேர்ம் இன்சூரன்ஸ்) போலல்லாமல், காலாவதியாகும் வரை அல்லது பாலிசி வாங்கப்பட்ட வருடங்களுக்கு மட்டுமே காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த உத்தரவாத வருமானத் திட்டம் பாலிசியின் முதிர்வுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு நிலையான தொகையை வழங்குகிறது.
உத்தரவாதமான வருமானத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வருமானத்தின் அளவு உறுதிசெய்யப்பட்ட தொகையின் சதவீதமாக அல்லது வருடாந்திர பிரீமியமாக நிர்ணயிக்கப்பட்டு கணக்கிடப்படுகிறது.
டேர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் பிரீமியம் குறைவாக உள்ளது. இருப்பினும், சேமிப்புக் கூறு சம்பந்தப்பட்டிருப்பதால், உத்தரவாதமான வருமானத் திட்டத்தில் நீங்கள் மிக அதிக பிரீமியத்தை செலுத்த வேண்டும். உத்தரவாத வருமானத் திட்டத்தை வாங்குவதற்கு முன், ஒருவர் முதலில் காப்பீட்டு பாலிசியை வாங்குவதற்கான நோக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
இணை நிறுவனர் மற்றும் இன்சூரன்ஸ் முகவர்கள் கூட்டணியின் இயக்குநர் ஆத்தூர் தக்கரின் கூற்றுப்படி, குறைந்த வருவாயை விட நிலையான மற்றும் உறுதியான வருமானம் விரும்பப்பட்டால் ஒருவர் உத்தரவாத திட்டங்களை வாங்க வேண்டும் என்கிறார்.
"இந்தத் திட்டங்கள் மூலதனப் பாதுகாப்பு மற்றும் நிலையான வருமானத்தை வழங்குகின்றன. ஆயுள் காப்பீட்டுத் திட்டம் குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. இதேபோல் உத்தரவாத காப்பீட்டுத் திட்டமும் வாடிக்கையாளர்களுக்கு எதிர்கால வருவாயின் நிச்சயமற்ற தன்மையை பெரிய அளவில் அகற்ற உதவுகிறது ”என்று தக்கார் கூறினார்.
1 கோடி ரிட்டர்ன்
உத்தரவாத வருமானத் திட்டத்தின் கீழ் உண்மையான வருமானம் சார்ந்திருக்கும் பல காரணிகள் உள்ளன. இவை ஒருவரின் வயது, காலம் மற்றும் பிரீமியம் தொகை மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் நன்கொடை உள்ளிட்ட பெரும்பாலான பாரம்பரியத் திட்டங்களில் உள் வருவாய் விகிதம் (IRR) ஆக இருக்கலாம் என்று தக்கார் கூறினார்.
ஒவ்வொரு காப்பீட்டாளரும் அதன் உத்தரவாத திட்டங்களின் கட்டமைப்பைக் கொண்டுள்ளனர். அதேநேரம், உத்தரவாதமான வருமானமானது, பிரீமியம் அல்லது காப்பீட்டுத் தொகையை அடிப்படையாகக் கொண்டது.
சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, பணம் செலுத்தும் கட்டமைப்பையும் ஒருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
"நிலையான வருமானத்துடன் அல்லது உத்தரவாதம் இல்லாத திட்டங்கள் மிகவும் அதிக விலை கொண்டவை. எ.கா., ஒரு சாதாரண டேர்ம் இன்சூரன்ஸ் திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் ரிட்டர்னுக்கு ஒரு வருடத்திற்கு 15000 ரூபாய் பிரீமியம் என்றால் மறுபுறம் உத்தரவாதமான வருமானத் திட்டங்களுக்கான பிரீமியம் ஆண்டுக்கு ரூ .3.5 லட்சம் முதல் ரூ .4 லட்சம் வரை, ”என்றார் தக்கார்.
மேலும் "உத்தரவாதத் திட்டத்திலிருந்து கிடைக்கும் வருமானம் 6% முதல் 8% க்கு மேல் அளிக்காது," என்றும் அவர் கூறினார்.
பாலிசிதாரரின் எதிர்பாராத மரணம் ஏற்பட்டால் காப்பீட்டை வாங்குவதற்கான நோக்கம் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பு என்றால், ஒருவர் டேர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்க வேண்டும். இதன் பிரீமியமும் குறைவாக இருக்கிறது. மேலும், ஒருவர் அதிக வருமானத்திற்காக சிறந்த நிதி தயாரிப்புகளில் முதலீடு செய்யலாம்.
ஒரு ஆலோசகராக, நாங்கள் எப்போதும் டேர்ம் இன்சூரன்ஸை வாங்க பரிந்துரைக்கிறோம், இது நீங்கள் இல்லாத நேரத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஒரு காப்பீட்டைப் பெறுவதற்கு எப்போதும் உதவும், அதே நேரத்தில் மீதமுள்ள பிரீமியம் தொகையை எங்காவது முதலீடு செய்தால் அது உங்களுக்கு சிறந்த பலனை அளிக்கும், ”என்றார் தக்கார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.