Provident Fund Withdrawal:வருமானத்தில் ஒரு பகுதியை பிஎஃப்பில் சேமித்து வைக்கும் ஊழியர்களுக்கான செய்தி தான் இது. EPFO இன் சமீபத்திய அறிவிப்பின்படி, "ஊழியர்கள் எந்த ஆவணமும் இன்றி PF சேமிப்பிலிருந்து பெரிய தொகையை எடுக்கலாம். புதிய விதியின்படி, ஏதேனும் அவசரம் ஏற்பட்டால் ஊழியர்கள் ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக ரூபாய் 1 லட்சம் ரூபாய் வரை அட்வான்ஸ் தொகையாக ஆவணங்கள் சமர்ப்பின்றி தரப்படுகிறது. முக்கியம்சமாக, ஊழியர்களின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்கள் கேட்கும் நாளிலே இந்த தொகை உடனடியாக வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குப் பொறுப்பான அதிகாரி (ACC-ASD for Head Office) மருத்துவ உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதா என்பதை பணம் கோரிய நாளின் மறுதினம் உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் நோய்ப் பாதிப்பால், மருத்துவமனைகளில் அவசரமாக அனுமதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் மருத்துவமனையில் ஆகும் செலவை மதிப்பிட முடியாது. இக்கட்டத்தில், இந்த அட்வான்ஸ் உடனடி தொகை உதவியாக இருக்கும் என EPFO கூறுகிறது.
EPFO அட்வான்ஸ் பணத்தை வழங்கியதையடுத்து, சம்பந்தப்பட்ட நோயாளியின் விவரம் மற்றும் மருத்துவமனையின் விவரத்தைச் செலவாகும் மதிப்பீட்டுத் தொகை குறிப்பிடாமல் சமர்ப்பிக்க கோருகிறது. இதை அந்நபர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர் இருக்கும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அட்வான்ஸ் தொகையான ரூ .1 லட்சத்திற்கும் மேல் தேவைப்படும் பட்சத்தில், அதற்கான பிராசஸை உடனடியாக மேற்கொள்கிறது.
மேலும், நெருக்கடியான நேரத்தில், மருத்துவ உதவித் தொகையை நேரடியாக ஊழியரின் சம்பள கணக்கிற்கு மாற்றப்படுகிறது அல்லது மருத்துவமனைக்கு நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 45 நாளுக்குள் பில்களை சமர்ப்பிக்க வேண்டும். அதிலிருக்கும் தொகையை வைத்து, மருத்துவ உதவித் தொகையுடன் இறுதிக்கட்ட பில் சரிசெய்து வழங்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil