இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி (LIC) மத்திய அரசின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது.கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பல தரப்பினர் எல்ஐசி திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், மக்கள் ஓய்வுக்கால வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், சரல் பென்ஷன் யோஜனா என்ற இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், நீங்கள் 60 வயதில் அல்ல, 40 வயதில் இருந்தே ஓய்வூதியம் பெறலாம்.
இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், பாலிசி எடுக்கும் போது மட்டுமே பிரீமியம் செலுத்த வேண்டும்.இதில் 12000 ரூபாய் வரை பென்சன் கிடைக்கும். இந்த பாலிசியில் இரண்டு வகையான திட்டங்கள் உள்ளன.
Life Annuity திட்டம்
இதில் கணக்கு வைத்திருப்பவருக்கு மட்டும் பென்சன் கிடைக்கும். கணக்குதாரர் உயிருடன் இருக்கும் வரை மாதந்தோறும் பென்ஷன் தொகை செலுத்தப்படும். இறந்தபின் நாமினிக்கு அவர் செலுத்திய பிரீமியம் தொகை வழங்கப்படும்.
Joint Life Pension Plan
இத்திட்டத்தின் கீழ் கணவன், மனைவி இருவரும் பென்சன் பெறலாம். இருவரில் நீண்டகாலம் இருப்பவருக்கு பாலிசியின் பலன்கள் கிடைக்கும். இருவரும் இறந்தபின் நாமினிக்கு பிரீமியம் தொகை கிடைக்கும்.
திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
- ஆன்லைனிலும், நேரடியாக எல்ஐசி அலுவலகத்திலும் சரல் பென்சன் பாலிசியில் முதலீடு செய்யலாம்
- பாலிசி எடுத்தவுடன், பென்ஷன் தொகை கிடைக்ககூடும்
- பென்ஷன் தொகையானது மாதாந்தரமாக, காலாண்டு வாரியாக, அரையாண்டு வாரியாக அல்லது ஆண்டுதோறும் கிடைக்கஎன்ற வகையில் விருப்பத்தை தேர்வு செய்யலாம்.
- இத்திட்டத்தில் ஆண்டுக்கு 12000 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகப்பட்ச டெபாசிட் தொகை கிடையாது.
- 40 முதல் 80 வயது வரை இத்திட்டத்தின் பலன்களை பெறலாம்
- பாலிசி தொடங்கி ஆறு மாதம் பின் கடன் பெறும் வசதியும் உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil