மகிளா சம்மான் சேமிப்புத் திட்டம் என்பது பெண்களுக்காக அரசால் நடத்தப்படும் சிறப்புத் திட்டமாகும். இது பெண்களுக்கு நல்ல வட்டி அளிக்கும் வைப்புத் திட்டமாக உள்ளது.
இந்தத் திட்டத்தினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 பட்ஜெட்டில் அறிவித்தார். இதில் முதலீடு செய்யப்படும் பணம், 2 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும்.
தற்போது இந்த திட்டத்திற்கான வட்டி 7.5 சதவீதமாக உள்ளது. இந்தத் திட்டத்தில், ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பது பார்ப்போம்.
ரூ.50 ஆயிரம் முதலீடு
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்ட கால்குலேட்டரின் படி, இந்தத் திட்டத்தில் நீங்கள் ரூ. 50,000 முதலீடு செய்தால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியாக ரூ. 8,011 கிடைக்கும்.
ஆக உங்கள் முதலீடு ரூ.58,011 ஆக வளர்ந்து நிற்கும்.
முதிர்வு காலத்திற்கு முன்பு நீங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க விரும்பினால், 1 வருடத்திற்குப் பிறகு இந்த வசதியைப் பெறுவீர்கள். உங்களுக்கு இடையில் பணம் தேவைப்பட்டால், 1 வருடம் முடிந்த பிறகு, நீங்கள் டெபாசிட் செய்த பணத்தில் 40 சதவிகிதம் வரை எடுத்துக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“