ram-temple | ayodhya-temple | delhi | ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவின் மூலம் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் உருவாகும் என்று வர்த்தகர்களின் அமைப்பான CAIT திங்கள்கிழமை (ஜன.15,2024) தெரிவித்துள்ளது.
அனைத்திந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) பல்வேறு மாநிலங்களில் உள்ள 30 நகரங்களின் வர்த்தக சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இதனைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால், "இந்த நிகழ்வு மத உணர்வுகளுடன் எதிரொலிப்பது மட்டுமல்லாமல், பொருளாதார நடவடிக்கைகளிலும் எழுச்சியைக் கொண்டுவருகிறது.
மக்களின் நம்பிக்கையும் நாட்டின் பாரம்பரிய பொருளாதார அமைப்பின் அடிப்படையில் பல புதிய வணிகங்களை உருவாக்க வழிவகுக்கின்றன" என்றார்.
மேலும், “ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வர்த்தக சங்கங்கள் மூலம் சுமார் 30,000 வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, “ஸ்ரீராமர் கொடிகள், பேனர்கள், தொப்பிகள், டி-சர்ட்டுகள் மற்றும் ராமர் கோயிலின் உருவம் அடங்கிய அச்சிடப்பட்ட 'குர்தாக்கள்' ஆகியவற்றுக்கு சந்தைகளில் அதிக தேவை உள்ளது.
"ராம் மந்திர் மாடல்களுக்கான தேவையும் வேகமாக அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 5 கோடி மாடல்கள் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக பல்வேறு மாநிலங்களின் பல நகரங்களில் சிறிய உற்பத்தி நிலையங்கள் இரவும் பகலும் வேலை செய்கின்றன" என்றார்.
இதையடுத்து, “அடுத்த வாரத்தில், டெல்லியில் உள்ள 200க்கும் மேற்பட்ட பெரிய சந்தைகள், ஏராளமான சிறிய சந்தைகள் ஸ்ரீராமர் கொடிகள் மற்றும் அலங்காரங்களைக் காணும் என்றார்.
மேலும், “பிருந்தாவனம் மற்றும் ஜெய்ப்பூரில் இருந்து நாட்டுப்புற நடனக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் வருவதால், டெல்லி பல கலாச்சார நிகழ்ச்சிகளைக் காணும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“