இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India (SEBI)) அனைத்து முதலீட்டாளர்களின் செயல்பாடுகள், வங்கி விபரங்கள், பங்கு விபரங்கள் ஆகியவற்றை முறைப்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளது.
செபி பங்கு சந்தையில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள், தங்களின் பான் கார்ட் மற்றும் வங்கி விபரங்களை விரைவில் சமரிப்பிக்க வேண்டும் என ஏப்ரல் மாதத்தில் அறிவித்தது.
ஷேர் ட்ரான்ஸ்ஃபர் ஏஜெண்ட்ஸ் மற்றும் பங்கு வர்த்தனை பதிவாளர்கள் முதலீட்டாளர்களிடம் இருந்து பான்கார்ட் PAN (Permanent Account Number) மற்றும் வங்கி விபரங்களை பெற்றுக் கொள்ள கால அவகாசம் அளித்தது செபி.
அதன்படி, செப்டம்பர் இறுதிக்குள் பான் மற்றும் வங்கி விபரங்களை சமர்பித்தல் தொடர்பாக, முதலீட்டாளர்களுக்கு கடிதம் அனுப்ப வேண்டிய வேலையினை ஆர்டிஏ எனப்படும் ஷேர் ட்ரான்ஸ்ஃபர் ஏஜெண்ட்ஸ் செய்து முடிக்க வேண்டும்.
முப்பது நாட்கள் இடைவெளிக்குள் இரண்டு முறை முதலீட்டாளர்களுக்கு ரிமைண்டர் அனுப்பவும் வேண்டும் என்று கூறியிருக்கிறது.
இந்த கடிதம் மற்றும் ரிமைண்டர்கள் ஆகியவற்றை கடிதம், அல்லது கொரியர் மூலமாக முதலீட்டாளர்களுக்கு அனுப்பப்படும் என்று ஆர்டிஏ கூறியுள்ளது.