அஞ்சலக சிறு சேமிப்பு திட்ட விதிகளில் திருத்தம்: இனி, இது இல்லாமல் முதலீடு செய்ய முடியாது!
தபால் அலுவலகத் திட்டத்தில் முதலீடு செய்யத் திட்டமிடுகிறீர்களா? இந்த புதிய விதியை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இது எதிர்காலத்தில் உங்களின் முதலீடுக்கு பிரச்னை வராமல் பாதுகாக்கும்.
Post Office Savings Scheme | Pan Card |தபால் அலுவலக திட்டத்தில் முதலீடு செய்வதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. தபால் அலுவலகத் திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிடுபவர்கள் இந்த திட்டங்களை அறிந்து கொண்டு முதலீடு செய்வதன் மூலம் தங்கள் முதலீடுகளுக்கு எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக்கொள்ளலாம்.
Advertisment
இந்த புதிய விதிமுறைகள் என்ன என்பதை பார்க்கலாம்.
அஞ்சல் அலுவலக திட்டம்
அஞ்சல் அலுவலகம் வருமான வரித் துறையின் தகவலுடன் உங்கள் நிரந்தர கணக்கு எண் (PAN) தகவலைச் சரிபார்க்கும். பான் எண்ணுடன் உங்கள் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவதே இதன் நோக்கம். மேலும், ஆதாரில் கொடுக்கப்பட்டுள்ள பெயர் மற்றும் பிறந்த தேதி சரியாக உள்ளதா என சரிபார்ப்பது அவசியம்.
விதிகளில் மாற்றம்
எந்தவொரு தபால் அலுவலக திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமானாலும், ஏப்ரல் 1, 2023 முதல் பான் மற்றும் ஆதார் தகவல்களை சமர்ப்பிப்பது கட்டாயமாகும். பான் மற்றும் ஆதாருக்கு இடையே கொடுக்கப்பட்ட தகவல்களில் வித்தியாசம் இருந்தால், நீங்கள் தபால் அலுவலக திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது.
சிபிஎஸ் அமைப்பு, பான் சரிபார்ப்பிற்காக புரோடீன் e-Gov டெக்னாலஜிஸ் (முன்னதாக NSDL) உடன் ஒருங்கிணைக்கப்பட்டது.
சிறு சேமிப்பு திட்டம்
சிறு சேமிப்பு திட்டத்திலும் பான் மற்றும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த முறை 30 ஏப்ரல் 2024 வரை அமலில் இருந்தது. பிபிஎஃப், என்எஸ்சி மற்றும் பிற சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பான், ஆதார் கட்டாயமாகிவிட்டது.
7 மே 2024 அன்று வெளியிடப்பட்ட அஞ்சல் துறையின் அறிவிப்பில், பான் சரிபார்ப்பு தொடர்பான புரோட்டீன் அமைப்பு 1 மே 2024 முதல் திருத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்), மகிளா சம்மன் சேமிப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (என்எஸ்சி) ஆகியவை சாதாரண மக்களிடையே பிரபலமான சிறு சேமிப்புத் திட்டங்களாகும்.
சிறுசேமிப்புத் திட்டத்தில் கிடைக்கும் வட்டி இதோ
வ.எண்
திட்டத்தின் பெயர்
வட்டி விகிதம் (%)
01
சுகன்யா சம்ரிதி யோஜனா
8.2
02
மகிளா சம்மான் சேமிப்பு திட்டம்
7.5
03
கிஷான் விகாஸ் பத்ரா
7.5
04
பி.பி.எஃப்
7.1
05
தேசிய சேமிப்பு சான்றிதழ்
7.7
06
மாதாந்திர வருமானத் திட்டம்
7.4
07
மூத்தக் குடிமக்கள் சேமிப்பு
8.2
08
5 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்
7.5
09
5 ஆண்டு ஆர்.டி திட்டம்
6.7
10
3 ஆண்டு டெபாசிட்
7.10
11
2 ஆண்டு டெபாசிட்
7.00
12
1 ஆண்டு டெபாசிட்
6.90
13
சேமிப்பு திட்டம்
4.00
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“