இந்திய ரூபாய் மதிப்பு : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் மதிப்பு உயர்வடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.4050ஆக சரிந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் மீண்டும் ஒரு வரலாற்றுச் சரிவினை சந்தித்தது.
தொடர் சரிவை சந்தித்த இந்திய ரூபாய் மதிப்பு
நேற்று காந்தி ஜெயந்தி விடுமுறையைத் தொடர்ந்து இன்று காலை பங்கு வர்த்தகம் ஆரம்பித்தது. ஆரம்ப நிலையிலேயே இந்திய ரூபாயின் மதிப்பு 73.4050ஆக சரிந்துள்ளது. அதன் பின்னர் ஆர்.பி.ஐ தன்னிடம் இருக்கும் டாலர்களை சந்தைகளில் விற்று இந்திய ரூபாயின் மதிப்பினை 73.23ஆக உயர்த்தியது.
மத்திய ரிசர்வ் வங்கி பணம் புழக்கம் இருக்கும் பங்கு வர்த்தக தளங்களில் அதிக கவனுத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்திய பங்குகளின் மதிப்பும் தொடர்ந்து இறங்கு முகத்துடன் காணப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கி மற்றும் எய்ச்சர் மோட்டார்ஸ் லிமிட்டட் போன்ற நிறுவனங்களின் பங்குகளும் சரிவடைந்துள்ளன.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
பெட்ரோல் டீசல் விலை
மாருதி சுஜுக்கி கார்களின் விற்பனை கடந்த மாதம் குறைந்த காரணத்தால் அதனுடைய பங்குகளும் குறைந்துள்ளன. அமெரிக்காவின் ட்ரெம்ப் ஆட்சி ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது. மேலும் பல்வேறு நாடுகளிடம் ஈரானில் இருந்து பெட்ரோல் பொருட்கள் வாங்கக் கூடாது என்று வேண்டுகோளும் விடுத்து அதற்கு காலக்கெடு அளித்திருந்தது.
இந்நிலையில் அடுத்த மாதம் அந்த காலக்கெடு முடிவடைகிறது. இந்தியா இந்த பிரச்சனையில் எடுக்கும் முடிவு மேலும் விலைவாசியில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க வைக்கலாம்.
2014ம் ஆண்டில் இருந்து, இந்தியா இப்படியான ஒரு கடுமையான விலைவாசி ஏற்றத்தால் பாதிப்பிற்குள்ளானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் மூன்றாவது மிகப்பெரிய பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. இந்த வருடம் மட்டும் வெளிக்காரணிகளால் இந்தியாவில் எண்ணெய்ப் பொருட்களின் விலை 50% அதிகரித்துள்ளது.