கடந்த செவ்வாய்க்கிழமை, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் 1 பைசா சரிவை சந்தித்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டு நிதி வெளியேற்றம் தொடர்வதும், உள்நாட்டுப் பங்குப் பரிவர்த்தனைகளில் ஏற்பட்டுள்ள முடக்க நிலையும் இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: https://indianexpress.com/article/business/rupee-value-paisa-low-us-dollar-9666483/
ரூபாயின் மதிப்பு நடுத்தர காலத்தில் ரூ. 83.80 மற்றும் ரூ. 84.50-க்கு வர்த்தகம் செய்ய வாய்ப்புள்ளதாகவும், இந்திய ரிசர்வ் வங்கியானது அதன் வலுவான அந்நிய செலாவணி கையிருப்பு மூலம் பின்னடைவை கட்டுப்படுத்தலாம் எனவும் அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணியில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 84.39 ஆக இருந்தது. அதன்பின்னர், உள்ளூர் நாணயம் அதிகபட்சமாக ரூ. 84.39 ஆகவும், குறைந்தபட்சமாக 84.41 ஆகவும் இருந்தது. இது இறுதியாக ரூ. 84.40 என்ற நிலைக்கு வந்தது. அதன்படி அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1 பைசா சரிந்தது.
“அந்நிய நிதிகள் இந்திய சந்தையில் தங்கள் விற்பனையை தொடர்ந்ததால் ரூபாய் மதிப்பு பலவீனமாக இருந்தது. எனினும், கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை வீழ்ச்சியிலிருந்து ரூபாய் மதிப்புக்கு ஓரளவு பாதிப்பு ஏற்படாத வகையில் அமைந்தது. ஏனெனில், வீழ்ச்சியின் வேகம் வரவிருக்கும் மாதங்களில் இந்தியாவின் இறக்குமதிச் செலவை மேம்படுத்தக்கூடும் ”என எல்கேபி செக்யூரிட்டிஸ குழுமத்தின் ஆய்வாளர் ஜதீன் திரிவேதி தெரிவித்துள்ளார்.
ஆனால், டாலர் குறியீட்டின் தொடர்ச்சியான வலிமை 105 க்கு மேல் இருப்பது ரூபாயின் மீது அழுத்தத்தை தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, கச்சா எண்ணெய் ஒரு பேரல் 0.60 சதவீதம் அதிகரித்து, 72.26 என்ற அமெரிக்க டாலர் மதிப்பில் உள்ளது.
உள்நாட்டு பங்குச் சந்தையில், 30 பங்குகள் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 820.97 புள்ளிகள் சரிந்தது. நிஃப்டியின் புள்ளிகள் 257.85 ஆக சரிந்திருந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள், திங்களன்று மூலதனச் சந்தைகளில் நிகர விற்பனையாளர்களாக இருந்தனர். அவர்கள் ரூ. 2,306.88 கோடி மதிப்புள்ள பங்குகளை ஏற்றிச் சென்றனர் என்று பரிமாற்ற தரவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ட்ரம்பின் ஆட்சியின் போது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8-10 சதவீதம் குறையக்கூடும் என்று எஸ்பிஐ ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பின் வெற்றி உலகளாவிய பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது என பல அறிக்கைகளும் வெளியாகி வருகின்றன. அதன்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு முதலில் வீழ்ச்சியையும், பின்னர் மதிப்பையும் பெறலாம் எனக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“