இஸ்ரேல்-ஹமாஸ் (பாலஸ்தீனம்) மோதலுக்கு இடையே உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளான சவூதி அரேபியாவும், ரஷ்யாவும் கச்சா எண்ணெய் விலைகள் குறித்து விவாதித்துள்ளன.
மேலும், இஸ்ரேல் மீது பாலஸ்தீனம் அக்.7ஆம் தேதி நடத்திய தாக்குதலை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்து வருகின்றன.
முன்னதாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், “ரஷ்யன் எரிசக்தி வாரம்” கருத்தரங்கம் நடந்தது. இதில் ரஷ்ய துணை பிரதமர் அலெக்ஸாண்டர் நோவக், சவூதி எரிபொருள் அமைச்சர் இளவரசர் அப்துல்லாசிஸ் பின் சல்மான்-ஐ வாழ்த்தி பேசினார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : Russia, Saudi Arabia discuss oil market, prices amid Israel-Hamas war
மேலும், ரஷ்யா, சவூதி அரேபியா இடையேயான கச்சா எண்ணெய் ஒத்துழைப்பு குறித்தும் பகிர்ந்துக்கொண்டார். இதுமட்டுமின்றி மாஸ்கோவிற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி மற்றும் சில ஓபெக் பிரதிநிதிகளும் மன்றத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவூதி அரேபியாவும் ரஷ்யாவும் இணைந்து ஒரு நாளைக்கு 1.3 மில்லியன் பீப்பாய்கள் அல்லது உலகளாவிய தேவையில் 1% க்கும் அதிகமான எண்ணெய் விநியோகக் குறைப்பை இந்த ஆண்டின் இறுதி வரை தொடர ஒப்புக் கொண்டுள்ளன.
முன்னதாக செவ்வாய்கிழமை சவூதி அரேபியா காசா மற்றும் அண்டை பகுதிகளில் பதற்ற நிலைமை அதிகரிப்பதைத் தடுக்க பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவதாகக் கூறியது, மேலும் எண்ணெய் சந்தைகளை உறுதிப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக மீண்டும் உறுதிப்படுத்தியது என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“