Advertisment

Samsung Black Friday Sale : அதிரடி ஆஃபர்.. நாளை ஆரம்பம்.. மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்!

சாம்ஸங் நிறுவனத்தின் ப்ளாக் ஃப்ரை டே ஆஃபர் வியாழக்கிழமை (நவ.24) தொடங்குகிறது. இதனுடன் இணைந்து, HDFC Bank, ICICI Bank, Axis Bank, Kotak Bank போன்ற வங்கிகளும் கூடுதல் கேஷ்பேக் சலுகைகளை வழங்குகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Top offers and discounts on Galaxy Z and Galaxy S22 series

சாம்ஸங் அதிரடி ஆஃபர் விற்பனை நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

இந்தியாவில் சாம்ஸங் நிறுவனம் ப்ளாக் ஃப்ரை டே ஆஃபர் விற்பனையை நவம்பர் 24 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 28ஆம் தேதி நிறைவு செய்கிறது.
இந்த ஆஃபர் விற்பனையின் போது கேலக்ஸி இசட், பிலிப்3, கேலக்ஸி எஸ்21, கேலக்ஸி எஸ்22 உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட்போன்கள் மலிவு விலையில் கிடைக்கவுள்ளன.

Advertisment

இதனுடன் இணைந்து, HDFC Bank, ICICI Bank, Axis Bank, Kotak Bank போன்ற வங்கிகளும் கூடுதல் கேஷ்பேக் சலுகைகளை வழங்குகின்றன. மேலும் சுலப தவணை வசதியும் செய்து கொடுக்கின்றன.
மேலும், நீங்கள் புதிய ஃபோன் அல்லது வேறு ஏதேனும் கேஜெட்டை வாங்க திட்டமிட்டிருந்தால் இது உங்களுக்கு நிச்சயம் பலன் அளிக்கும். இந்த ஆஃபர் திருவிழா சாம்ஸங்கின் அதிகாரப்பூர்வ இணையத்தில் நடைபெறுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ரூ.60,000க்கும் குறைவாக:

கேலக்ஸி எஸ்22+, கேலக்ஸி எஸ்22 மற்றும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களின் ஆரம்ப விலை விற்பனையின் போது ரூ.60,000க்குள் குறைக்கப்படும்.
இந்தத் தொடரின் ஆரம்ப விலை ரூ.72,999. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் கூடுதல் சலுகையில், கூடுதல் தள்ளுபடியைப் பெற வாங்குபவர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை மாற்றிக் கொள்ளலாம்.

Samsung Galaxy Z சீரிஸ் மடிக்கக்கூடிய ஃபோன் ரூ. 60,000-க்குள்:

Samsung முதலில் Galaxy Z Flip 4, Galaxy Z Flip 3 மற்றும் Galaxy Z Fold 4 ஆகியவற்றின் ஆரம்ப விலையை ரூ.80,999 என நிர்ணயித்தது.
இது மாடலைப் பொறுத்து ரூ.1,44,999 வரை செல்லும். இருப்பினும், நாளை முதல் நவம்பர் 24 வரை தொடங்கும் கருப்பு வெள்ளி விற்பனையின் போது, விலைகள் ரூ.67,999 தொடக்க விலையில் குறைக்கப்படும்.

Galaxy 5G தொடருக்கான விலைக் குறைவு:

Galaxy S21 FE 5G மற்றும் Samsung Galaxy F23 5G ஆகியவற்றிற்கு தள்ளுபடிகள் கிடைக்கும், புதிய சலுகை விலைகள் ரூ.31,999 முதல் ரூ.42,999 வரை இருக்கும்.
Google Play Store, Apple App Shop இல் கிடைக்கும் Samsung Shop ஆப் மூலம் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் இந்தச் சலுகைகள் மற்றும் கூடுதல் வவுச்சர்களைப் பெறலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Samsung Smart Phone Samsung
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment