சாம்சங் இந்தியா உற்பத்தி ஆலை சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டுவருகிறது. இந்த ஆலையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்துவருகின்றனர். இந்நிலையில், உற்பத்தி ஆலையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், திங்கள்கிழமை (ஜூலை 8, 2024) ஆலைக்கு வெளியே ஒன்றுகூடி, புதிதாக நிறுவப்பட்ட தொழிற்சங்கத்தின் அங்கீகாரம், சிறந்த ஊதியம் உள்ளிட்டவற்றை கோரினர்.
இது குறித்து, சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இ முத்துக்குமார் தி ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸிடம், “தொழிலாளர் சங்கத்தின் அங்கீகாரம் கோரி நாங்கள் ஆலைக்கு வெளியே ஒரு 'கேட் மீட்டிங்' நடத்தினோம்” என்றார். மேலும், “கூலி உயர்வு மற்றும் மேம்பட்ட ஷிப்ட் நேரம் உள்ளிட்ட பிற கோரிக்கைகளின் பட்டியலையும் நாங்கள் சமர்ப்பித்துள்ளோம்” என்றார்.
இதில் 800க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒன்றுகூடியுள்ளனர். சாம்சங் தமிழ்நாடு ஆலையில் 1,600 நிரந்தர தொழிலாளர்கள் உட்பட 2,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.
மார்ச் 2022 இல், சாம்சங் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் புதிய கம்ப்ரசர் உற்பத்தி ஆலையை அமைக்க ரூ.1,588 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. புதிய வசதி ஆண்டுக்கு 8 மில்லியன் கம்ப்ரசர் யூனிட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என்று நிறுவனம் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“