New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/04/oil-production.jpg)
சவூதி அரேபியா மே, 2023ம் ஆண்டுவரை பெட்ரோலிய பொருள்கள் உற்பத்தியை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
சவூதி அரேபியா மே, 2023ம் ஆண்டுவரை பெட்ரோலிய பொருள்கள் உற்பத்தியை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
சவூதி அரேபியா மே 2023 இறுதி வரை எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு 500,000 பீப்பாய்கள் குறைக்கும் என்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்.2) கூறியது.
இந்த நடவடிக்கையானது பெட்ரோலிய எரிபொருள்களின் விலைகளை உயர்த்தக்கூடும்.
மேலும், உக்ரைனில் போரினால் ஏற்பட்டுள்ள எரிபொருள் பணவீக்கத்தை உலகம் சமாளிக்கும் நிலையில், ரியாத் மற்றும் வாஷிங்டனுக்கு இடையிலான உறவுகளை சீர்குலைக்கும்.
சவூதி எரிசக்தி அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை இதனை தெரிவித்தது.
எண்ணெய் சந்தையை ஸ்திரப்படுத்தும் நோக்கில் "முன்னெச்சரிக்கை நடவடிக்கை" என்று அமைச்சகம் விவரித்தது. 2022 ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவின் சராசரி உற்பத்தியான 11.5 மில்லியன் பீப்பாய்களில் 5% க்கும் குறைவான வெட்டுக்களைக் குறிக்கிறது.
அந்த வகையில், முன்பு ஒரு நாளைக்கு சுமார் 2 மில்லியன் பீப்பாய்கள் குறைக்கப்பட்டது. இது, அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக வந்தது.
இதில் எரிவாயு மற்றும் பிற அடிப்படைப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவது ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்தது. ஜனாதிபதி ஜோ பிடன் அந்த நேரத்தில் "விளைவுகள்" இருக்கும் என்று சபதம் செய்தார்.
மேலும், ஜனநாயக சட்டமியற்றுபவர்கள் சவுதியுடன் ஒத்துழைப்பை முடக்குவதற்கு அழைப்பு விடுத்தனர்.
தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா இரண்டும் அரசியல் நோக்கங்களை மறுத்து, ஆரோக்கியமான சந்தை விலையை பராமரிப்பதில் கவனம் செலுத்துவதாகக் கூறின.
அந்த வெட்டுக்களுக்குப் பிறகு, எண்ணெய் விலைகள் உண்மையில் குறைந்து வருகின்றன. உலகளாவிய அளவுகோலான ப்ரெண்ட் கச்சா, கடந்த வார இறுதியில் ஒரு பீப்பாய்க்கு சுமார் $80 என்ற அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது,
அக்டோபர் தொடக்கத்தில் ஒரு பீப்பாய் சுமார் $95 ஆக இருந்தது, சவுதி அரேபியாவின் அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனமான அரம்கோ, கடந்த ஆண்டை விட 161 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியதாக சமீபத்தில் அறிவித்தது.
நிறுவனத்தின் 2021 முடிவுகளின் $110 பில்லியனுடன் ஒப்பிடும்போது லாபம் 46.5% அதிகரித்துள்ளது. 2027 ஆம் ஆண்டிற்குள் உற்பத்தியை ஒரு நாளைக்கு 13 மில்லியன் பீப்பாய்களாக உயர்த்த நம்புவதாக Aramco தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.