வாழ்க்கையில் பணத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வின் பற்றாக்குறை பலரிடமும் காணப்படுகிறது. இதனால், ஏராளமான மக்கள் தங்கள் முதலீட்டு பயணத்தை வாழ்க்கையில் மிகவும் தாமதமாகத் தொடங்குகிறார்கள்.
ஆனால், ஒரு நாளைக்கு 50 ரூபாய் கூட சேமித்து, சிறுவயதிலிருந்தே மாதாந்திர மியூச்சுவல் ஃபண்ட் SIP திட்டத்தில் முதலீடு செய்தால், ஒரு முதலீட்டாளர் ஓய்வுபெறும் வயதை அடையும் போது கோடிக்கணக்கான ரூபாய்களை குவிக்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், ஒருவர் நாள் ஒன்றுக்கு ரூ.50 சேமித்து SIP திட்டத்தில் முதலீடு செய்தால், போர்ட்ஃபோலியோ மதிப்பு எவ்வளவு பெரிய அளவில் வளரும் என்பதைப் பார்ப்போம்.
10 வகுப்பு
10 ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்களின் சராசரி வயது 15. ஒரு மாணவர் ஒரு நாளைக்கு ரூ. 50 சேமிக்கத் தொடங்கினால், மாத இறுதியில் அவரிடம் ரூ. 1500 இருக்கும், அதை நல்ல பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
SIP கால்குலேட்டர் மாதம் ஒன்றுக்கு 1500 ரூபாயை 45 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர் 60 வயதை அடையும்போது,12 சதவீத ரிட்டன் என்றால் ரூ.3.32 கோடி பெறலாம்.
அதே நேரத்தில் ஆண்டுக்கு 10% வருமானம் கிடைத்தாலும், இந்த முதலீட்டாளர் 60 வயதிற்குள் சுமார் 1.5 கோடி ரூபாய் பெற முடியும்.
12 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு மாணவர், மாணவி என்றால் ஒரு நல்ல பரஸ்பர நிதி திட்டத்தில் 20 வயதில் இருந்து தினசரி ரூ.50 சேமிப்பதன் மூலம் 40 ஆண்டுகளில் சுமார் ரூ.1.78 கோடியைப் பெற உதவும். ஆண்டுக்கு 10% வருமானம் கிடைத்தாலும், இந்த முதலீட்டாளர் 60 வயதிற்குள் சுமார் 95 லட்சத்தை பெற முடியும்.
பிபிஎஃப் திட்டம்
சந்தை தொடர்பான அபாயங்கள் காரணமாக மியூச்சுவல் ஃபண்ட் SIP கள் ஆபத்தானதாகக் கருதப்பட்டாலும், இளம் முதலீட்டாளர்கள் PPF போன்ற உத்தரவாதத் திட்டங்களுக்கும் செல்லலாம்.
பிபிஎஃப் கணக்கில் மாதம் ஒன்றுக்கு ரூ.1500 முதலீடு செய்தால் 40 ஆண்டுகளில் ரூ.39 லட்சமும், 45 ஆண்டுகளில் ரூ.56 லட்சமும் 7.1% ஆண்டு வட்டியில் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“