வங்கியில் இந்த 7 அக்கவுண்டில் பணத்தை போடுங்க.. வட்டியை அள்ளலாம்!

7 வகையான சேமிப்பு கணக்குகள். மற்றும் அதற்கு வழங்கப்படும் வட்டி விவரம்.

By: Updated: September 16, 2020, 01:58:56 PM

savings account bank interest savings account bank : பணத்தை கையில் வச்சிகிட்டு எந்த வகையான சேமிப்பு கணக்கில் பணம் போடுவது என குழம்பி கொண்டு இருக்கிறீர்களா? உங்களுக்கு தான் இந்த பதிவு. வங்கியில் இருக்கும் 7 வகையான சேமிப்பு கணக்குகள். மற்றும் அதற்கு வழங்கப்படும் வட்டி விவரம்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு வங்கி கணக்கு
2.பெண்கள் சேமிப்பு கணக்கு
3.சாதாரண சேமிப்பு கணக்கு
4.கட்டணமில்லாத அடிப்படை வங்கிக் கணக்கு
5.மாணவர் சேமிப்பு கணக்கு
6.என்.ஆர்.இ. சேமிப்பு கணக்கு
7.என்.ஆர்.ஒ. சேமிப்பு கணக்கு

மூத்த குடிமக்கள் சேமிப்பு வங்கி கணக்கு :

பெயருக்கு ஏற்றார் போல் மூத்த குடிமக்கள் சேமிப்பு வங்கி கணக்கு வாடிக்கையாளர் தேவைக்கேற்றார் போல 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கானது. இதில் பல்வேறு நன்மைகள் உள்ளது, அவை நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் (FD) பிரத்யேக வட்டி விகிதம், குறைவான கட்டணங்கள் ஆகியன அடங்கும்.

பெண்கள் சேமிப்பு கணக்கு
பல வங்கிகள் பெண்களின் பொருளாதார தேவை, முதலீடு மற்றும் வாழ்க்கைத் தேவைகளுக்காக பிரத்யேக வங்கிக் கணக்கை வடிவமைத்துள்ளனர். சில வங்கிகள் அதிக பண வரம்பு மற்றும் பணம் திரும்பப் பெரும் சலுகைகள் போன்றவற்றை வழங்குகின்றன.

சாதாரண சேமிப்பு கணக்கு

சாதாரண சேமிப்புக் கணக்கை யாரும் திறக்கலாம். சராசரியாக காலாண்டிற்கு குறைந்த பட்ச தொகையை வைப்பு வைக்க வேண்டும். தவறினால் தண்டனை பணம் வசூலிக்கப்படும். சாதாரண சேமிப்புக் கணக்கில் கணக்குப் புத்தகம், இணைய வங்கி வசதி, தொலைபேசி வங்கி வசதி, காசோலைப் புத்தகம் மற்றும் பற்று அட்டை போன்ற அம்சங்கள் உள்ளன.

கட்டணமில்லாத அடிப்படை வங்கிக் கணக்கு

இந்த வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்கள் குறைந்த பட்ச வைப்புத் தொகை வரம்பு கொண்டவர்கள் அல்லது வரம்பு அற்றவர்கள். பெருவாரியான மக்களைச் சென்றடைவதற்காக ரிசர்வ் வங்கியால் இந்த திட்டம் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் இந்த திட்டத்தில் சில கட்டுப்பாடுகள் உள்ளன அது வங்கிக்கு வங்கி மாறுபடுகின்றன.

மாணவர் சேமிப்பு கணக்கு
சில வங்கிகள் மட்டுமே மாணவர் சேமிப்பு கணக்கு வசதியினை வழங்குகின்றன. இதில் குறைந்த பட்ச வைப்பு தொகை இருக்காது அல்லது மிகவும் குறைந்தபட்ச தொகை இருந்தால் போதுமானது.

என்.ஆர்.ஐ தொடர்பான கணக்குகள்
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, இந்திய வங்கி அமைப்பில் தனி இடம் உண்டு இவர்களுக்கு தரப்பட்ட வங்கி சேவைகள் வழங்கப்படுகிறது. இதில் சேமிப்பு கணக்குத் திட்டங்கள் உள்ளன.

source: Facebook

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Savings account bank interest savings account bank savings accounts interest bank account

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X