savings account bank interest : பிரபல வங்கிகளில் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் பல்வேறு கட்டணங்கள் குறித்த விவரங்களை அனைத்தையும் பார்க்கலாம் வாங்க.
Advertisment
மஹாராஷ்டிரா வங்கி , ஆக்சிஸ் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி மற்றும் ஆர்.பி.எல் ஆகிய வங்கிகள் இந்த மாற்றங்களை கொண்டுவரவுள்ளன. குறைந்தபட்ச நிலுவை பராமரிப்பு மற்றும் பணத்தை திரும்பப் பெறுவதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
savings account bank interest:எதற்கெல்லாம் கட்டணம்!
1. சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்சம் மாத சாரசரியை பராமரிக்கவில்லை என்றால், கட்டணம் விதிக்கப்படும்.
Advertisment
Advertisements
2. பணத்தை திரும்பப் பெறுவதற்கான கட்டணமும் உயர்த்தப்படும்.
3.பாங்க் ஆப் மகாராஷ்டிராவில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் இனி மாத சராசரி தொகையாக ரூ.1500க்கு பதிலாக ரூ.2000 இருக்க வேண்டும். மீறினால் மாதந்தோறும் நகர்புற கிளைகளில் ரூ.75, புறநகர் கிளைகளில் ரூ.50, கிராமப்புற கிளைகளில் ரூ.20 அபராதம் விதிக்கப்படும்.
4. பணம் எடுப்பது மற்றும் டெபாசிட் பெறுவது 3 முறை மட்டுமே இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளத. அதற்கு மேல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.100 வசூலிக்கப்படும். டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை.. லாக்கருக்கான வைப்புத்தொகை குறைக்கப்பட்டாலும், லாக்கர் வாடகை நிலுவைத் தொகைக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
5. கோடக் மஹிந்திரா வங்கியில் சேமிப்பு மற்றும் கார்ப்பரேட் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, டெபிட் கார்டு-ஏடிஎம் கட்டணங்கள் ஒரு மாதத்திற்கு ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்குப் பிறகு, பணம் திரும்பப் பெறுவதற்கான கட்டணம் ரூ .20 ஆகவும், நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ .8.5 ஆகவும் உள்ளன.
6. ஆக்சிஸ் வங்கி இசிஎஸ் பரிவர்த்தனைக்கு இதுவரை கட்டணம் வசூலிக்காமல் இருந்த நிலையில் இனி, ரூ.25 வசூலிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 ஆகிய குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை கையாள, 1000 எண்ணிக்கைக்கு கையாளுதல் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil