நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் அனைத்து அறிவிப்புகளும் மக்களும் சிறந்த வகையில் உதவியாக இருந்து வருகிறது. எஸ்பிஐ -யில் பல திட்டங்கள் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தெரிவதில்லை. அதற்கு பல காரணங்ளை கூறலாம். அந்த வகையில் இன்று மிக மிக அவசியமான எஸ்பிஐ மினிமம் பேலன்ஸ் திட்டங்கள் மற்றும் மாற்றங்களை பற்றி அறியலாம் வாங்க.
state bank of india:
BSBD கணக்கு. பேங்க் சேவிங்க்ஸ் பேங்க் அக்கவுண்ட் என்ற இந்த ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டு எஸ்பிஐ யில் செயல்பாட்டில் இருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். அதிலும் இந்த கணக்கில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக பணம் வைத்திருந்தால் ஆண்டுக்கு 3.25 சதவீதம் வட்டி கிடைக்கும்.
ஏடிஎம் கார்டுகளில் அதிகபட்சம் 4 முறை பணம் எந்தவித கட்டணமும் இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம். இது எஸ்பிஐ ஏடிஎம் அல்லது மற்ற வங்கி ஏடிஎம் எதுவாக இருந்தாலும் சரி.இந்த ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டுக்கு ரூபே கார்டுகள் வழங்கப்படும். இதற்காக வருடாந்திர பராமரிப்பு கட்டணம் எதுவும் கிடையாது. இது மட்டும் அல்ல, எஸ்பிஐயில் மற்றொரு ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டு வசதியும் உள்ளது. இது குழந்தைகளுக்கானது.
விதிமுறைகள்:
இந்த வங்கிக் கணக்கிற்கு உங்களுக்கு செக் புக் கிடைக்காது. இந்த கணக்கை தொடங்குவதற்கான அடிப்படை விதிமுறையே வேறு எந்த வங்கியிலும் சேமிப்பு கணக்கு இருக்க கூடாது என்பது தான். ஒரு வேளை நீங்கள் வேறு ஏதேனும் வங்கிகளில் கணக்கு வைத்துக் கொண்டு, இந்த ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கினை செய்து கொண்டால் 30 நாட்களில் இந்த Basic Savings Bank Deposit Account க்ளோஸ் ஆகி விடும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil