/tamil-ie/media/media_files/uploads/2020/08/5-20.jpg)
savings account in sbi bank savings account sbi
savings account in sbi bank savings account sbi : 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இரண்டு சேமிப்பு வங்கி கணக்குகள் வழங்கப்படும் என எஸ்பிஐ வங்கி (SBI) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கிறது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ‘பெஹ்லா கதம்’ மற்றும் ‘பெஹ்லி உதான்’ என்ற சிறார்களுக்கு இணைய வங்கி மற்றும் மொபைல் வங்கி வசதியுடன் சேமிப்பு வங்கி கணக்குகளை வழங்கி வருகிறது.பணத்தை சேமிப்பதன் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதோடு, “பணத்தை வாங்கும் சக்தியையும்” அறிந்து கொள்ள இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவிக்கிறது. இரண்டு சேமிப்பு வங்கி கணக்குகளை சிறார்களுக்கு வழங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எஸ்பிஐ தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
இந்த வங்கி கணக்குகளுடன் தொடர்ச்சியான வைப்புத்தொகைக்கு ஒரு நிலையான வழிமுறையை அமைப்பதற்கான விருப்பம் இலவசமாகக் கிடைக்கிறது.சிறார்களுக்கான எஸ்பிஐ சேமிப்பு வங்கி கணக்கின் அம்சங்கள். வங்கி கணக்கில் மாத சராசரி இருப்புத்தொகை (MAB) பணம் தேவையில்லைஅதிகபட்ச இருப்புத்தொகை ரூ.10 லட்சம் ஆகும்
செக் புத்தக வசதி இரண்டு வகையான கணக்குகளுடன் கிடைக்கிறது. கணக்கு வைத்திருப்பவரின் மொபைல் எண் பதிவு செய்யப்பட்டு 10 காசோலைகள் உடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட காசோலை புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. முந்தைய திட்டத்தில் இது மைனர் என்ற பெயரில் கார்டியனுக்கு வழங்கப்படும். பின்னர் அந்த மைனர் நபர் ஒரே மாதிரியாக கையெழுத்திட முடிந்தால் தொகை வழங்கப்படும்.
போட்டோ ஏடிஎம் அதாவது டெபிட் கார்டு வசதி உள்ளது. பெஹ்லா கதம் திட்டத்தின் கீழ், திரும்பப் பெறுதல் / பிஓஎஸ் வரம்பு ரூ .5,000. மைனர் மற்றும் கார்டியன் பெயரில் அட்டைகள் வழங்கப்படும்.
பெஹ்லி உதான் திட்டத்தின் கீழ் திரும்பப் பெறுதல் / பிஓஎஸ் வரம்பு ரூ.5,000 மற்றும் மைனர் பெயரில் அட்டை வழங்கப்படுகிறது.பில் கட்டணம், டாப் அப்கள் போன்ற வரையறுக்கப்பட்ட பரிவர்த்தனை உரிமைகளுடன் மொபைல் வங்கி வழங்கப்படும். ஒரு நாளைக்கு பரிவர்த்தனை வரம்பு ரூ.2,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவற்றை கண்காணிக்கும் உரிமையும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
source : facebook
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.