savings account interest bank savings account : ஆண் குழந்தைக்களுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள “பொன்மகன் சேமிப்பு திட்டம்” மூலமாக வைப்பு முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறை இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. ஆண்டுக்கு 12 முறை என குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிப்பு தொகை செலுத்தலாம். ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு, 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். இதற்கு 8.1% வட்டி அளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் இணைய வயது வரம்பு கிடையாது .
சேமிப்பு மட்டுமே போதாது; அதையும் தாண்டி பலன் தரும் சில திட்டங்கள் இருக்கின்றன. பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம், ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்பு திட்டத்தை அஞ்சல்துறை செயல்படுத்துகிறது. கூடுதல் வட்டி மட்டுமின்றி உயர்கல்விக்கு கணிசமான தொகை கிடைக்க உதவும் திட்டங்கள் இவை.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”