சேவிங்க்ஸ் அக்கவுண்ட் ஓபன் பண்ண போறீங்களா? நீங்க தெரிஞ்சிக்க இவ்ளோ விஷயம் இருக்கு!

பல வங்­கிகள் புது­மை­யான பில் செலுத்தும் வச­தி­களை அளிக்­கின்­றன. இவற்­றுக்கு ரிவார்டு புள்­ளி­களும் கூடுதல் பலன் உண்டு.

savings account interest bank savings account
savings account interest bank savings account

savings account opening sbi savings account opening online : வங்கி சேமிப்பு கணக்கை பலரும், சாதா­ர­ண­மாக கரு­தலாம். சேமிப்பு கணக்­கிற்கு கிடைக்கும் வட்டி வரு­மானம் குறை­வாக இருப்­பது மட்டும் அல்­லாமல், சேமிப்பு கணக்­கிற்கு, பல­வி­த­மான கட்­ட­ணங்கள் வசூ­லிக்­கப்­ப­டு­வதும், சேமிப்பு கணக்கு மீதான ஈர்ப்பு குறைய ஒரு கார­ண­மாக இருக்­கலாம். அதிலும் தற்­போது பணி மாற்றம் கார­ண­மாக சேமிப்பு கணக்கை மாற்றிக் கொள்­வது, பழைய கணக்கை அலட்­சியம் செய்­வதும் வழக்­க­மாக இருக்­கி­றது. எனினும் சேமிப்பு கணக்கை அலட்­சியம் செய்­யக்­கூ­டாது.

ஒவ்­வொரு கணக்­கிலும் குறைந்­த­பட்ச தொகை இருக்க வேண்டும் என்­பதை உறுதி செய்ய வேண்டும் என்­ப­தோடு, செயல்­ப­டாத கணக்­குகள் நிதி குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தலாம். எனவே ஒரு சேமிப்பு கணக்கை முதன்மை கணக்­காக பரா­ம­ரிப்பது நல்­லது.

பழைய சேமிப்பு கணக்­கு­களை, கவ­னிக்­காமல் விட்டு வைக்கும் போது, அவற்றில் குறைந்­த­பட்ச தொகையை வைத்­தி­ராமல் இருப்­ப­தற்­கான அப­ராதம் விதிக்­கப்­ப­டலாம். இது தேவை­யில்­லாத வீண் செலவு என்­பது மட்டும் அல்ல, எளி­தாக தவிர்க்க கூடி­யது.

சேமிப்பு கணக்கு முத­லீடு அம்­சத்­திலும் கைகொ­டுக்கும். மியூச்­சுவல் பண்ட் திட்­டங்­களில் முத­லீடு செய்ய வேண்டும் எனில், வங்கி சேமிப்பு கணக்கு அவ­சியம். மேலும் வழக்­க­மான வைப்பு நிதி மற்றும் தொடர் வைப்பு நிதி வச­தி­க­ளையும் அணு­கலாம். நிதி இலக்­கு­க­ளுக்கு ஏற்ப, முத­லீடு செய்ய இவை கைகொ­டுக்கும். சில வங்­கிகள் குறிப்­பிட்ட தொகைக்கு மேல் உள்ள தொகை, வைப்பு நிதிக்கு தானாக மாற்­றப்­படும் வச­தி­யையும் அளிக்­கின்­றன. இவை மிகவும் பய­னுள்­ள­தாக இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Savings account opening sbi savings account opening online sbi savings account state bank sbi

Next Story
மினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com