/tamil-ie/media/media_files/uploads/2019/07/DSC02610-16.jpg)
statebank sbinetbanking
savings account state bank : உங்களுக்கு பெண் குழந்தைகள் இருக்கின்றார்களா? அவர்களின் எதிர்காலம் குறித்து யோசித்து வருகின்றீர்களா? உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்கால திட்டத்திற்கு துணை நிற்கிறது எஸ்.பி.ஐ வங்கி. சுகன்யா சம்ரித்தி யோஜனா மூலம் உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பணம் சேமிக்க துவங்குங்கள்.
இந்த திட்டம் முழுக்க முழுக்க பெண் குழந்தைகளின் பெற்றோர்களால் மட்டுமே துவங்கப்பட வேண்டும். அக்குழந்தைக்கு பெற்றவர்கள் யாரும் இல்லையென்றால் கார்டியனாக பொறுப்பேற்கும் நபர்கள் கணக்கினை துவங்கலாம்.
அந்த குழந்தைக்கு 10 வயது ஆகும் வரை இந்த கணக்கினை நிர்வகிக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கு தான் என்று எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது. ஆனால் இந்த கணக்கில் யார் வேண்டுமானாலும் பணம் சேமிக்க இயலும்.
savings account state bank : நீங்களும் சேமிக்கலாம்!
இந்த கணக்கில் செலுத்தப்படும் பணத்திற்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதை உறுதி செய்கிறது எஸ்.பி.ஐ வங்கி.
எஸ்பிஐ கொடுத்த திடீர் ஷாக்... இந்த நேரத்தில யாரும் இதை எதிர்பார்க்கல!
எஸ்.பி.ஐ வங்கியின் இந்த திட்டம் clause (viii) of sub-section (2) of section 80C of the Income-tax Act vide Notification number 9/2015 S.O.210 (E), F.No. 178/3/2015-ITA-I dated 21.01.2015-ன் கீழ் வருவதால் வருமான வரி சட்டம் 80சியின் நடைமுறைகள் அனைத்தும் இந்த கணக்கில் பின்பற்றப்படும்.
குழந்தையின் பெற்றோர்கள் அல்லது லீகல் கார்டியனுக்கு மட்டுமே வரிமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மற்ற உறவினர்கள், தாத்தா அல்லது பாட்டி தன்னுடைய பேர குழந்தைகளுக்காக இந்த கணக்கில் பணம் செலுத்தினால் அதற்கு வருமான வரி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.