savings bank savings bank account : வங்கி சேமிப்பு கணக்கில் 20 லட்சத்துக்கும் மேல் பணம் வைத்திருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கு தான் இந்த தகவல் முழுமையாக படியுங்கள். வருமான வரித்துறை போட்டிருக்கும் புதிய ரூல்ஸ் உங்களுக்கும் பொருந்தும் ஜாக்கிரதையாக இருங்கள்.
Advertisment
savings bank savings bank account : ஜாக்கிரதை!
வங்கிகளில் பெரும்பாலும் பணத்தை சேமிப்பவர்கள் கல்யாணம், கல்வி செலவு, வீடு வாங்க அல்லது புதிய தொழில் தொடங்க. இதையும் தாண்டினாலும் பிள்ளைகளின் வருங்காலத்திற்காக இப்படி தான் இருக்கும். அப்படி எந்த வங்கியில் ஆவது சேவிங்க்ஸ் அக்கவுண்ட் தொடங்கி அதில் 20 லட்சம் வரை பணம் சேமித்து வைத்திருப்பவர்களுக்கு வருமான வரித்துறை அறிவித்திருக்கும் புதிய ரூல்ஸ் தான் இது.
பொதுவாகாவே, வங்கிகளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்வதாகவோ, பணம் எடுப்பதாகவோ இருந்தால் பான் நம்பரை குறிப்பிட வேண்டும். இது நடைமுறையில் இருக்கும் ஒன்று தான். இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது கருப்பு பணத்தை ஒழிப்பதற்கே ஆகும். இதோடு சேர்ந்து இப்போது புதிய ரூல்ஸூம் வந்தாச்சு.
அதன்படி, வருமான வரி செலுத்தாத நபராக இருந்தால் தங்களது வங்கி கணக்கில் இருந்து ரூ.20 லட்சம் வரை மட்டுமே எந்தவித வரி பிடித்தமும் இல்லாமல் பெற முடியும். ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பணம் எடுத்தால் 2 சதவீதமும், ரூ.1 கோடிக்கு மேல் பணம் எடுத்தால் 5 சதவீதமும் வரி பிடித்தம் செய்யப்படும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
&
அதேவேளையில் வருமான வரி செலுத்தும் வாடிக்கையாளராக இருந்தால், தங்களது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 கோடி வரை பணம் எடுத்தால் எந்தவித வரி பிடித்தமும் செய்யப்படாது. ரூ.1 கோடிக்கு மேல் பணம் எடுத்தால் 2 சதவீதம் வரி பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜூலை 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.