savings money savings money : பணத்தின் மதிப்பு எப்போதுமே குறையாது.கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் சரி ஸ்மார்ட் வோர்க் செய்து சம்பாதித்தாலும் சரி பணம் எப்போதுமே பணம் தான்.. (money is always ultimate) இப்படிப்பட்ட பணத்தை எப்படி பாதுகாப்பாக சேர்க்க வேண்டும் தெரியும்ல.
முதலீடு.. பணத்தை சேமிக்கவும் எப்பவும் நான் முதலீடு மீது தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். காரணம், பணத்தை இரட்டிப்பாக முதலீடுகள் நமக்கு பெரிதும் கைக்கொடுக்கின்றன. சிலருக்கு முதலீடு மீது பயம் அதிகம். ஏமாற்றி விடுவார்களோ என்பது தான். பயப்பட வேண்டாம்.உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும். அதற்கு தான் அரசு திட்டங்கள் அதாவது முதலீடு திட்டங்கள் உள்ளன. அதைப்பற்றி தெரிந்துக் கொள்ளலாமா?
1. கிசான் விகாஸ்:
இந்த திட்டத்தின் காலம் 112 மாதங்கள் ஆகும். இதன் மூலம் ஒருவர் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இதற்கான அதிகபட்ச வரம்பாக இல்லை. எனினும் இந்த திட்டத்திற்கு வரிவிலக்கு எதுவும் கிடையாது. எனினும் இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் இதனை பயன்படுத்தி வங்கிகளில் கடன் வாங்கிக் கொள்ள முடியும்.இது இந்திய அரசின் உத்தரவதம் கொண்ட சேமிப்பு திட்டம் என்பது கூடுதல் தகவல்.
2. அடல் ஓய்வூதிய திட்டம் :
18-40 வயதுடைய ஒரு இந்திய குடிமகன் இந்த அடல் ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியானவர் தான். இந்த திட்டத்தினை சுய தொழில் செய்பவர்கள் எவரும் எடுக்கலாம். நீங்கள் இந்த திட்டத்தில் இணைய உங்கள் வங்கி அல்லது தபால் நிலையத்தில் இந்த திட்டதினை எடுத்துக் கொள்ளலாம்.
பேங்க் அக்கவுண்டில் ரூ. 10,000 இல்லையென்றால் ரூ.500 அபராதம்! எந்த வங்கியில் தெரியுமா?
3.தேசிய ஓய்வூதிய திட்டம் :
இந்த திட்டத்தின் மூலம் ஈக்விட்டி மற்றும் கார்ப்பரேட் பாண்ட்கள், அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டு திட்டத்தில் 50,000 ரூபாய் வரையிலான முதலீட்டு திட்டத்தில் 80 சிசிடின் (1பி) கீழ் வரி விலக்கு உண்டு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil