Advertisment

ரூ. 1000 செலுத்தி இந்த திட்டத்தை தொடங்குங்கள்... 50% தொகை உங்களுக்கு கிடைக்கும்!

கல்வி அல்லது திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை பெற்றுக்கொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
LIC online policy lic policy online

LIC online policy lic policy online

savings scheme money savings scheme : ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூபாய் 1000 இக்கணக்கில் செலுத்தப்படவேண்டும். மொத்தம் 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும்வரை பணம் செலுத்த வேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 150000 ரூபாய் வரை வைப்புத்தொகையாகச் செலுத்தலாம். ஆண்டுக்கு 7.6 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.

Advertisment

இக்கணக்கில் ஒரு நிதியாண்டில் செலுத்தப்படும் தொகைக்கு வருமானவரிவிலக்கு அளிக்கப்படுகிறது. முதிர்வு தொகையை 21ஆம் ஆண்டு இறுதியில் பெறலாம். மேலும் பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும் போது அவரது கல்வி அல்லது திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை பெற்றுக்கொள்ளலாம்.

சிறுமிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோதியால் ஜனவரி 22 தேதி 2015ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.

இந்த திட்டத்தின்படி, 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்சமான தொகையாக ரூபாய் 1000 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment