/tamil-ie/media/media_files/uploads/2020/08/5-29.jpg)
investment plan in bank investment ideas investment tips
savings schemes money saving schemes savings schemes bank : ஒவ்வொரு மாதமும் 5,100 வரையில் சம்பாதிக்கும் வகையில் சிறப்பு சேமிப்புத் திட்டம் தபால் துறை ஸ்கீம்மில் உள்ளது. உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
தபால் நிலயத்தால் செயல்படுத்தப்படும் மிகச் சிறந்த திட்டங்களில் இந்த மாத வருமானத் திட்டமும் ஒன்று. ஒவ்வொரு மாதமும் 5,100 ரூபாய் வருமானத்தை ஈட்ட முடியும். இது உத்தரவாதமான லாபம் தரும் திட்டமாகும். நீங்கள் குறைந்த ரிஸ்க்குடன் முதலீடு செய்ய விரும்பினால், இந்தத் திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் குறைந்தது 1,500 ரூபாயை டெபாசிட் செய்யலாம்.
மாத வருமான திட்டத்தில் இணைய வாடிக்கையாளர்கள் தபால் நிலையத்திற்கு நேரடியாகச் சென்று ஒரு கணக்கைத் திறக்க முடியும். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் வாடிக்கையாளரின் தேவையைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. நீங்கள் முதிர்வு காலத்துக்கு முன்னரே பணத்தை எடுக்க விரும்பினால் கணக்கின் 1 வருடம் முடிந்ததும் உங்களுக்கு அந்த வசதி கிடைக்கும். தற்போது, இந்தத் திட்டத்தில் 6.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. தனியாகவோ அல்லது கூட்டுக் கணக்கைத் திறப்பதன் மூலம் நீங்கள் இதில் முதலீடு செய்யலாம்.
இந்த மாத வருமான சேமிப்புத் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீடு ரூ.4.5 லட்சம் ஆகும். ஆனால் கணவன்-மனைவி இருவரும் கூட்டுக் கணக்கின் கீழ் இந்தத் திட்டத்தில் ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், அவர்கள் ஆண்டுக்கு 6.6 சதவீதம் என்ற விகிதத்தில் ரூ.61,200 சம்பாதிப்பார்கள். அதாவது, ஒவ்வொரு மாதமும் முதலீட்டாளருக்கு ரூ.5,100 வட்டி வருமானம் கிடைக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.