/tamil-ie/media/media_files/uploads/2021/01/New-Project.jpg)
sbi sbiloan sbi statebank loan sbi
savingsaccount savings bank account savings : பணத்தை கையில் வைத்துக் கொண்டு நல்ல அதிக லாபம் தரும் சேவிங்ஸ் திட்டத்தில் போட யோசித்து கொண்டிருகிறீர்களா? இதோ முழு விபரம் உங்களுக்காக
பல்வேறு வங்கிகளின் வட்டி விகிதத்தை ஒப்பிடும் போது, ​​கனரா வங்கி (Canera Bank) மற்றும் IDBI வங்கி ஆகியவை சேமிப்புக் கணக்குகளுக்கு அதிக வட்டி செலுத்துகின்றன என்பதைக் காட்டுகிறது.
கனரா வங்கியில் சேமிப்புக் கணக்கில் வட்டி விகிதம் 2.90 சதவீதம் முதல் 3.20 சதவீதம் வரை, IDBI வங்கியில் சேமிப்புக் கணக்கில் 3.0-3.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்களை விட சேமிப்புக் கணக்கில் அதிக வட்டி பெறுகின்றனர்.
சேமிப்புக் கணக்கில் அதிக வட்டி செலுத்தும் முதல் 10 வங்கிகளைப் பற்றி நீங்கள் பேசினால், கனரா வங்கி மற்றும் IDBI வங்கிக்குப் பிறகு பஞ்சாப் மற்றும் IndusInd வங்கி 3.10 சதவீத அதிக வட்டியைக் கொடுக்கின்றன. இதன் பின்னர், இந்தியன் ஓவர்சீஸ் (IOB) வங்கி 3.05 சதவீதம், யூனியன் வங்கி 3 சதவீதம், பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) 3 சதவீதம், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா 2.75 சதவீதம் முதல் 3 சதவீதம், பாங்க் ஆப் இந்தியா (BOI) 2.90 சதவீதம், இந்தியன் வங்கி (IB) 2.90 சதவீதம், பாங்க் ஆப் பரோடா 2.75 சதவீதம் வட்டி அளிக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us