sbi account balance state bank account balance : முன்பெல்லாம் நம் சேமிப்பு கணக்கு அல்லது சேலரி கணக்கு எந்த மாதிரியான கணக்குகள் வங்கியில் வைத்திருந்தாலும் அதில் இருக்கும் பேலன்ஸை தெரிந்துக் கொள்ள வங்கிக்கு நேராக செல்ல வேண்டும். பாஸ் புக்கை எண்ட்ரி செய்த பின்பு தான் தெரிந்துக் கொள்ள முடியும்.
Advertisment
அதன் பின்பு, ஏடிஎம்மில் தெரிந்துக் கொள்ளும் வசதி வந்தது. சில ஆண்டுகள் கழித்து ஆன்லைன் நெட் பேங்கிங் மூலம் தெரிந்து கொள்ளலாம். இப்போது, அதை விட சிறந்த வசதியாக வந்து விட்டது மிஸ்டு கால் சேவை.
ஆன்லைன் நெட் பேங்கி வசதி இல்லாதவர்கள் இந்த வசதியை எளிமையாக பெறலாம். எந்தவித கட்டணௌம் இதற்கு இல்லை. முடிந்தவரை தெரியாதவர்களுக்கும், படிப்பறிவு இல்லாதவர்களுக்கும் இந்த முக்கிய தகவலை பகிருங்கள்.
நீங்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய (State Bank Of India) வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் இருப்புதொகையை(ACCOUNT BALANCE) தெரிந்து கொள்ள வங்கிக்கு செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல்யில் இருந்து 1800112211 என்ற எண்ணுக்கு ஒரு கால் செய்து IVR மூலம் உங்கள் கணக்கில் உள்ள இருப்பு தொகையை உடனே தெரிந்துகொள்ளலாம் இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.
இதக்கு கட்டாயமாக உங்கள் வங்கி கணக்கில் உங்கள் மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.பதிவு செய்யவில்லை எனில் உங்கள் வங்கி கிளையை அணுகவும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”