sbi account opening sbi account : எஸ்பிஐ வங்கியிலக் கவுண்ட் வைத்திருப்பவர்கள் அல்லது இனிமேல் தான் அக்கவுண்ட் ஓபன் செய்ய நினைப்பவர்கள் இந்த செய்தியை முதலில் படியுங்கள். கண்டிப்பாக பயன் தரும்.
Advertisment
ஒரு தொடர் வைப்பை – ஆர்டி (recurring deposit) தொடங்க வேண்டும் என திட்டமிட்டிருந்தால் அதை நீங்கள் வீட்டிலிருந்தே தொடங்கலாம். பாரத ஸ்டேட் வங்கி, தனது வாடிக்கையாளர்கள் ஆர்டி கணக்கை ஆன்லைன் மூலமாகவே தொடங்க அனுமதிக்கிறது. முதலீட்டாளர்கள் எஸ்பிஐ யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக இதை எளிதாக செய்யலாம். அதற்கு முன்பு, ஆர்டி கணக்கின் சில அம்சங்கள் குறித்துப் பார்க்கலாம்.
தொடர் வைப்பு என்பது இந்திய வங்கிகளால் வழங்கப்படுகின்ற ஒரு தனித்துவமான term-deposit. இது ஒரு முதலீட்டு கருவி மக்கள் இதில் முறையாக டெப்பாஸிட் செய்து முதலீட்டின் மீது ஏற்புடைய வருமானத்தை ஈட்ட அனுமதிக்கிறது. தொடர் வைப்பின் வட்டி விகிதம் அவ்வப்போது மாறுபடும்.
sbi account opening sbi account : எப்படி தொடங்குவது?
Advertisment
Advertisements
onlinesbi.com என்ற இணையதள முகவரிக்கு சென்று ‘e-RD (RD)/ e-SBI Flexi Deposit account’தேர்வு செய்து,
‘Proceed’ கொடுக்கவும்.
மாத தவனைக்கான குறைந்தபட்ச தொகை ரூபாய் 100/-. கணக்கை தொடங்கிய பிறகு தவனைக்கான தொகை மற்றும் தவனைகளின் எண்ணிக்கைகள் ஆகியவற்றை மாற்ற முடியாது. டெபிட் அட்டையில் உள்ளது போலவே பெயர், செயல்படும் விதம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட ஆர்டி கணக்கின் வங்கி கிளை ஆகியவை இருக்கும். ஆர்டி கணக்கு TDS க்கு உட்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil