sbi account : பணத்தை சேமிப்பதற்காகவே எஸ்பிஐ நடுத்தர மக்களுக்காக 3 புதிய திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுக படித்தியுள்ளது.நம் நாட்டில் உள்ள பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் எஸ்பிஐ மகத்தான சேவையை எல்லா தரப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் நலன் கருதி 3 முக்கிய மாற்றங்கள் அறிவித்துள்ளது. இந்த மாற்றம் மற்றும் சேவைகள் குறித்த விவரங்களை தினமும் நீங்கள் இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.
ரெப்போ வட்டி :
வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்புக்கு வட்டி வீதத்தை ரெப்போ வீதத்துடன் தொடர்புபடுத்துவதிலிருந்து விலக்கு அளித்துள்ளது. ஆனால், அதற்கான வட்டிவீத சதவீதத்தில் மாற்றம் இல்லை என தெரிவித்துள்ளது. (தற்போது இது 3.5 சதவீதமாக உள்ளது). வரும் மாதங்களில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி வீதத்தைக் குறைக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. இதனால் சேமிப்புக் கணக்கில் ரூ. 1 லட்சத்துக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிய படுகிறது.
ஜீரோ பேலன்சில் அக்கவுண்ட்.. வாடிக்கையாளர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை.
முத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி
வீட்டிற்கே சென்று வங்கிச் சேவையை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் படி எஸ்பிஐ வங்கிக் கிளைகளை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள முத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று சேவையை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
வங்கிச் பரிவத்தனை சேவைகளுக்கு 100 ரூபாய் கட்டணமும், வங்கிச் சாரா பரிவர்த்தனை சேவைகளுக்கு 60 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ யோனோ (SBI YONO)
இந்தியாவிலேயே முதன் முறையாக யோனோ கேஷ் ஆப் மூலமாக டெபிட் கார்டு இல்லாமலே ஏடிஎம் – களில் பணப்பவர்த்தனை செய்யலாம். இந்த வசதி இந்தியா முழுவதும் உள்ள 16,500 ஏடிஎம்-களில் செயல்பாட்டில் உள்ளது.