சேலரி அக்கவுண்ட் மட்டுமில்லை.. ஏகப்பட்ட ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டுகள் எஸ்பிஐ-யில் உண்டு!

அனைத்து வசதிகளும் திரும்பப் பெறப்பட்டு, அந்த வங்கிக் கணக்கு, சாதாரண சேமிப்புக் கணக்கு போல தொடரும்.

sbi sbi cheque sbi bank
sbi sbi cheque sbi bank

sbi account zero balance account salary : ஊழியர்களின் சம்பளக் கணக்கில் (salary account in bank) பல சலுகைகள் கிடைக்கின்றன. ஆனாலும், பலருக்கும் இந்த தகவல்கள் இதில் கிடைக்கும் சிறப்மசங்கள் பற்றி தெரிவதில்லை. இதுவரை தெரிந்து கொள்ளாதவர்கள் இனியாவது தெரிஞ்சிக்கோங்க.

1. சம்பளக் கணக்குகளுக்கு கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. அதோடு, ஓவர் டிராஃப்ட், மலிவான கடன்கள், காசோலைகளை இலவசமாக அனுப்புதல், பே ஆர்டர் (pay orders) மற்றும் வங்கி வரைவோலை (demand drafts), இலவச இணைய பரிவர்த்தனைகள் என பல வசதிகளை வழங்குகின்றன.

2. கணக்கை ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றுவதைப் போலவே, சம்பளக் கணக்கையும் மாற்றிக் கொள்ளலாம். அதற்கு சில நிபந்தனைகள் இருந்தபோதிலும், இது சாத்தியமான ஒன்றே.

3. சம்பள கணக்கை பணம் இல்லாமலேயே பூஜ்ஜிய நிலுவைத் தொகையில் (zero balance) திறக்க முடியும். வழக்கமாக, ஒரு வங்கியில் கணக்கைத் திறக்க, குறைந்தது1000 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இது தவிர, பிற வங்கிகள் ஒரு சாதாரண கணக்கில் ஏடிஎம் (ATM) வசதியைப் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கின்றன

4. சம்பளக் கணக்கு திறக்கப்படும் வங்கியில், ஊழியருக்கு வேறு எந்தக் கணக்கும் இருக்கக்கூடாது.

5. தொடர்ந்து சில காலத்திற்கு உங்கள் கணக்கில் சம்பளம் வரவில்லை என்ரால், சம்பளக் கணக்கு, சாதாரணமான சேமிப்புக் கணக்காக மாறிவிடும். salary account-க்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும் திரும்பப் பெறப்பட்டு, அந்த வங்கிக் கணக்கு, சாதாரண சேமிப்புக் கணக்கு போல தொடரும்.

6. லாக்கர், ஸ்வீப்-இன், சூப்பர் சேவர் வசதி, இலவச காசோலை புத்தகம், இலவச நிறுவல்கள், இலவச பாஸ் புக் மற்றும் இலவச மின்னஞ்சல் அறிக்கை போன்ற வசதிகளையும் வங்கிகள் வழங்குகின்றன.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi account zero balance account salary account sbi salary account sbi netbanking

Next Story
சந்தோஷமான செய்தி தான்.. குறைந்தது வெங்காய விலை.! காய்கறி விலை நிலவரம்tomato tamil onion tamil tomato
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com