SBI agriculture gold loan : விவசாயிகளின் தேவைகளை கவனத்தில் கொண்டு எஸ்.பி.ஐ வங்கி விவசாயிகளுக்கான தங்க நகைக்கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பான முழுமையான தகவல்கள் கீழே இடம் பெற்றுள்ளன. மேலும் தகவல்களை அறிந்து கொள்ள நீங்கள் உங்கள் வங்கிக் கிளை மேலாளரை இது தொடர்பாக அணுகவும்.
யோனோ செயலி மூலம் இனி நீங்கள் மிகவும் குறைந்த வட்டியில் விவசாய தங்கக் கடன்களை பெற்றுக் கொள்ளலாம் என்று எஸ்.பி.ஐ. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது.
இந்த வங்கிக் கடன் மூலம் விவசாயிகள் பெறும் நன்மைகள் என்ன?
- 7% வரை குறைவான வட்டியில் கடனை வாங்கிக் கொள்ளலாம்
- மிகவும் எளிமையான முறையில் இந்த கடனை விவசாயிகள் பெற்றுக் கொள்ள இயலும்
- மிக விரைவில் கடனைப் பெற யோனோ செயலி மூலம் ஒருவர் சில நொடிகளில் விண்ணப்பம் செய்ய இயலும்
தங்கக் கட்டிகள் மீது நகைக் கடன் வழங்கப்படாது என்பதை நினைவில் கொள்ளவும். ஆனால் அதே நேரத்தில் 50 கிராம் வரையில் தங்க நாணயங்கள் மீது வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.
யாருக்கு இந்த கடன் வழங்கப்படும்?
பின்வரும் வகைகளின் குறுகிய கால உற்பத்தி/முதலீட்டு கடன் தேவைகளை பூர்த்தி செய்வதே இந்த கடனின் நோக்கம்
- விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், சொந்த மற்றும் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள நிலத்தில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு
- பால், இறைச்சி, மீன், மற்றும் ஆட்டுப்பண்ணை வைத்திருக்கும் சுயதொழில் முனைவோர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தங்களின் திட்டம் சார்ந்த செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த முதலீடு தேவைப்படும் எனில் அவர்களுக்கு
- RBI/GoI/NABARD வழிகாட்டுதல்களின்படி விவசாயத்தின் கீழ் வகைப்படுத்த அனுமதிக்கப்படும் மற்ற அனைத்து விவசாய நடவடிக்கைகளும் இந்த கடன் வழங்கப்படுகிறது.
விவசாயம் அல்லது அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மற்றும் நிறுவனம் அல்லாத கடன் வழங்குபவர்களிடமிருந்து பெறப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்த விரும்பும் எந்தவொரு நபரும் விவசாயத்தின் கீழ் வகைப்படுத்த RBI அனுமதித்துள்ள நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களும் தங்க நகைக்கடனை பெற்றுக் கொள்ள முடியும்.
விவசாயம் மற்றும் அதுசார் விவசாய தொழில்களில் ஈடுபட்டுள்ளதாகவும், தங்க ஆபரணங்களின் அடமானத்தின் மீது பெறப்பட்ட அதிக வட்டி விகிதக் கடனைத் திருப்பி செலுத்த கடனுக்காக விண்ணப்பிப்பதாகவும் அவர் சுய உறுதிமொழிச் சான்றிதழை வழங்க வேண்டும். நிலம் வைத்திருப்பதற்கான சான்றுகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதான சான்றுகளையும் வழங்க வேண்டும். யோனோ செயலி மூலம் மட்டுமே கடனுக்காக விண்ணப்பிக்க இயலும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.