scorecardresearch

SBI Alert: ஏடிஎம் மோசடிகளை தடுக்கும் முயற்சி… இந்த வசதியை யூஸ் பண்ண தெரிஞ்சுக்கோங்க!

இந்த ஓடிபி சேவை 10,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை எடுக்க மட்டுமே தேவைப்படுகிறது.

SBI Whatsapp Banking
எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவை

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, மோசடி பணப்ப பரிவர்த்தனைகளை தடுத்திட ஓடிபி (OTP) வாயிலான பணப் பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சேவையின் மூலம், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மொபைலுக்கு வரும் ஓடிபியை பதிவிட்டால் மட்டுமே ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும்.

ஆனால், இந்த ஓடிபி சேவை 10,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை எடுக்க மட்டுமே தேவைப்படுகிறது.

இந்த ஓடிபி வழி பரிவர்த்தனை, 2020 ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலில் உள்ளது. இருப்பினும், இந்த சேவையின் பலன்களை மீண்டும் ஒரு முறை வாடிக்கையாளர்களுக்கு வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வங்கி வெளியிட்ட அறிவிப்பில், எஸ்பிஐ ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான OTP-அடிப்படையிலான முயற்சியானது மோசடிகளை தடுக்கும் தடுப்பூசியாகும். உங்களை எப்போதும் மோசடியில் இருந்து பாதுகாப்பதே எங்கள் முதல் நோக்கமாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தது.

OTP பணப் பரிவர்த்தனை சேவை எவ்வாறு இயங்குகிறது?

  • ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது உங்களிடம் ஓடிபி கேட்கப்படும்
  • ஓடிபி நம்பர், நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்
  • அந்த 4 இலக்கு ஓடிபி எண்ணை, பதிவிட வேண்டும்
  • அதன்பிறகே, பணம் ஏடிஎம் மிஷினில் இருந்து வெளியே வரும்.

குறிப்பு: 10,000 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை எடுக்கும்போது மட்டுமே ஓடிபி தேவைப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Sbi alert avoid unauthorised atm transactions with otp cash withdrawal

Best of Express