இந்தியாவின் மிகப் பெரிய வங்கியிலிருந்து இலவச பரிசை வெல்ல விரும்புகிறீர்களா? இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் என்று வரும் மெசேஜ்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். இது உங்கள் தனிப்பட்ட மற்றும் ரகசிய தகவல்களை இழக்க வழிவகுக்கும். இதுபோன்ற ஃபிஷிங் தாக்குதல்களுக்கு எதிராக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்துக் கொள்ள எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான Onlinesbi.com என்ற வலைப்பக்கத்தை பார்வையிடவும்.சமீபத்தில், எஸ்பிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக ட்வீட் ஒன்றை செய்துள்ளது. அதில், வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட மற்றும் ரகசிய தகவல்களை இழக்க வழிவகுக்கும் ஃபிஷிங் இணைப்புகள் குறித்து அதன் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எஸ்பிஐயின் ட்வீட், "இந்த இணைப்புகளை உங்கள் இன்பாக்ஸில் பெறுகிறீர்களா? தெளிவானது! இந்த ஃபிஷிங் இணைப்புகளைக் கிளிக் செய்தால் உங்கள் தனிப்பட்ட மற்றும் ரகசிய தகவல்களை இழக்க நேரிடும். எனவே எச்சரிக்கையாக இருங்கள். அத்தகைய லிங்க்களை கிளிக் செய்வதற்கு முன் சிந்தியுங்கள்!" இவ்வாறு எஸ்பிஐ தனது ட்வீட் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இலவசங்களை வழங்கும் இணைப்புகளை ஏற்றுக்கொள்வதை எச்சரித்துள்ளது.
ஃபிஷிங் தாக்குதல்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட அடையாளத் தரவு மற்றும் நிதிக் கணக்கு நற்சான்றிதழ்களைத் திருட சமூக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப சூழ்ச்சி இரண்டையும் பயன்படுத்துகின்றன. எனவே இதுபோன்ற ஃபிஷிங் தாக்குதல்களில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்கள் தகவல்களை பாதுகாக்க பின்வரும் பாதுகாப்பு நடைமுறைகளை தெரிந்து வைத்திருப்பது மிக அவசியம்.
* இணைய வங்கி சேவையை பயன்படுத்தும் பயனர் ஒரு முறையான இணைய முகவரியிலிருந்து ஒரு மோசடி மின்னஞ்சலைப் பெறுகிறார்.
* அதில் கொடுக்கப்பட்டுள்ள ஹைப்பர்லிங்கைக் கிளிக் செய்ய மின்னஞ்சல் பயனரை அழைக்கிறது.
* பயனர் ஹைப்பர்லிங்கைக் கிளிக் செய்து, உண்மையான இணைய வங்கி தளத்தைப் போலவே தோற்றமளிக்கும் போலி வலைத்தளத்திற்கு திருப்பி விடப்படுகிறார்.
* இத்தகைய மின்னஞ்சல்கள் வழக்கமாக உங்களுக்கான வெகுமதியை அளிப்பதாகவோ அல்லது அபராதம் குறித்த எச்சரிக்கையாகவோ இருக்கும்.
* அடுத்ததாக உங்கள் இணைய வங்கி சேவைக்கான உள்நுழைவு அல்லது பயனாளர் பெயர் அல்லது சுயவிவரம், பரிவர்த்தனை கடவுச்சொற்கள் மற்றும் வங்கி கணக்கு எண்கள் போன்ற ரகசிய தகவல்களை வழங்க கேட்கப்படும்.
* பயனர் அவரது விவரங்களை நல்ல நம்பிக்கையுடன் வழங்கி 'சமர்ப்பி' பொத்தானைக் கிளிக் செய்கிறார்.
* பயனர்களுக்கு இப்போது பிழையான பக்கம் காண்பிக்கப்படும்.
* இப்பொது பயனர் ஃபிஷிங் தாக்குதலுக்கு இரையாகிவிட்டார்.
எனவே இதுபோன்ற அறியப்படாத மூலத்திலிருந்து மின்னஞ்சல் மூலம் வந்த எந்தவொரு இணைப்பையும் நீங்கள் கிளிக் செய்யக்கூடாது. அவை தீங்கிழைக்கும் குறியீட்டைக் கொண்டிருக்கலாம் அல்லது 'ஃபிஷிங் தாக்குதல்' ஆக இருக்கலாம்.
அடுத்து, பாப்-அப் சாளரமாக வந்த பக்கத்தில் எந்த தகவலையும் ஒருவர் வழங்கக்கூடாது. கடவுச்சொல், பின், டிஐஎன் போன்ற தகவல்கள் கண்டிப்பாக ரகசியமானவை. மேலும் அவை வங்கியின் ஊழியர்கள் அல்லது சேவை ஊழியர்களுக்கு கூட தெரியாது என்ற உண்மையை வங்கி வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, ஒருவர் அத்தகைய தகவல்களைக் கேட்டாலும் ஒருபோதும் வெளியிடக்கூடாது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.