scorecardresearch

SBI Alert: இதைச் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும்; எஸ்பிஐ அறிவிப்பு

SBI alert link pan card to aadhar otherwise account goes inactive: பான் கார்டு எண் உடன் ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால் கணக்கு முடக்கப்படும்; எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை

SBI Alert: இதைச் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும்; எஸ்பிஐ அறிவிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையை வழங்கியுள்ளது. அதில், வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் செப்டம்பர் 30 -க்கு முன் தங்கள் நிரந்தர கணக்கு எண்ணை (PAN) ஆதார் எண் உடன் இணைக்குமாறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 30 காலக்கெடுவுக்கு முன் இரண்டையும் இணைக்கத் தவறினால், எஸ்பிஐ வங்கியின் சேவைகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளது.

மறுபுறம், செப்டம்பர் 30 க்குள் ஆதார் உடன் இணைக்கப்படாவிட்டால் பான் கார்டு செயலற்றதாகிவிடும் என்று வருமான வரித் துறையும் எச்சரித்துள்ளது. வருமான வரிச் சட்டத்தின் கீழ், அவ்வாறு செய்யத் தவறினால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அண்மையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஒரு அறிவிப்பில் பான் எண்ணை ஆதார் எண் உடன் இணைக்கத் தவறினால், அது செயல்படாததாகிவிடும் என்று கூறியுள்ளது. காலக்கெடு முடிந்ததும் பயனர்கள் தங்கள் பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைத்தால், பான் கார்டு “ஆதார் எண்ணை அறிமுகப்படுத்திய நாளிலிருந்து செயல்படும்.

உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது ஒரு கடினமான செயல் அல்ல, ஆன்லைனில் சில நிமிடங்களில் எளிதாக செய்யலாம்.

எளிய இணைப்பு நடைமுறை.

வருமான வரி மின் நிரப்புதலின், https: //incometaxindiaefiling.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்வையிடவும்.

விரைவு இணைப்புகள் பிரிவில் உள்ள ‘இணைப்பு ஆதார்’ பிரிவுக்குச் செல்லவும்.

உங்கள் பான் எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிடவும்.

உங்கள் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி உங்கள் பெயரை உள்ளிடவும்.

ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் மற்றும் அதை OTP மூலம் சரிபார்க்கவும்.

உங்கள் எண் இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் பிறந்த தேதி மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தால், ‘எனக்கு ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு மட்டுமே உள்ளது’ என்ற பெட்டியை டிக் செய்யவும்.

‘ஆதார் விவரங்களை UIDAI உடன் சரிபார்க்க ஒப்புக்கொள்கிறேன்’ என சரிபார்ப்புக்கு கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.

‘ஆதார் இணைப்பு’ பொத்தானைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது, ​​நீங்கள் பான் கார்டுடன் உங்கள் ஆதாரை வெற்றிகரமாக இணைத்துள்ளீர்கள் என்று ஒரு பாப்-அப் தோன்றும்.

ஸ்எம்எஸ் மூலம் பான் மற்றும் ஆதார் இணைப்பது எப்படி

எஸ்எம்எஸ் மூலம் உங்கள் ஆதார் எண்ணை பான் உடன் இணைக்கலாம். “UIDPAN (Space) உங்களுக்கு 12 இலக்க ஆதார் (Space) உங்கள் 10 இலக்க PAN” என்று உங்கள் பதிவு எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 க்கு அனுப்பவும்.

இந்த எளிய செயல் முறைகள் மூலம் உங்கள் பான் எண்ணை ஆதார் எண் உடன் இணைத்து, தேவையற்ற சிக்கல்களை தவிர்த்திடுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Sbi alert link pan card to aadhar otherwise account goes inactive

Best of Express