scorecardresearch

5 மணி நேரத்திற்கு பணம் அனுப்ப முடியாது… எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தனது 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

5 மணி நேரத்திற்கு பணம் அனுப்ப முடியாது… எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

எஸ்பிஐ வங்கியின் ஆன்லைன் பரிவர்த்தனை தளங்கள் தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக நாளை 5 மணி நேரத்துக்கு இயங்காது என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தனது 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் நாளை இரவு 11.30 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 4.30 மணி வரை நடைபெறும் என்றும், குறிப்பிட்ட இந்த 5 மணி நேரத்தில் வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், UPI, Yono, Yono Lite, Yono Business ஆகிய சேவைகளை பயன்படுத்த முடியாது. இந்த நேரத்தில் மட்டும் வாடிக்கையாளர்கள் பொறுமை காக்க வேண்டுமென என தெரிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளுக்காக எஸ்பிஐ வங்கி இதுபோல அவ்வப்போது ஆன்லைன் பரிவர்த்தனை சேவைகளை நிறுத்திவைப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Sbi alert net banking yono and other bank services not available on this time