எஸ்பிஐ அப்டேட்: எஸ்எம்எஸ் மூலம் அக்கவுண்ட் பேலன்ஸ், மினி ஸ்டேட்மென்ட் பெறுவது எப்படி?

SBI Balance Check Mobile Number: எஸ்எம்எஸ் சேவை மூலம் எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர் தகவல் ப்[பெற வேண்டுமெனில்,  'MSTMT' என்று டைப் செய்து கட்டணமில்லா எண் 09223766666 க்கு அனுப்பவும்.

By: February 21, 2020, 6:37:33 PM

How to check SBI Account Balance: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு இருப்பு, மினி அறிக்கையை பல முறைகள் மூலம் சரிபார்க்கலாம். மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங், வங்கிக் ஏடிஎம், கிளை, எஸ்எம்எஸ் பேங்கிங் (எஸ்பிஐ விரைவு) போன்றவற்றின் மூலம் எஸ்பிஐ பேலன்ஸ் இருப்பு தகவல் மற்றும் மினி அறிக்கையை பெறலாம்.

கிரெடிட் கார்ட் மேல எப்பவும் ஒரு கண்ணு இருக்கட்டும்… செலவுகளை கவனத்தில் கொள்ளுங்கள்!

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கி வழங்கிய எஸ்எம்எஸ் பேங்கிங் சேவைகளைப் பயன்படுத்தி அவர்களின் எஸ்பிஐ கணக்கு நிலுவை சரிபார்க்கலாம் அல்லது சிறு அறிக்கையைப் பெறலாம். அவர்கள் செய்ய வேண்டியது, எஸ்பிஐ பேலன்ஸ் அளிக்கும் கட்டணமில்லா எண் 09223766666க்கு மிஸ்டு கால் அல்லது அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்புவது மட்டுமே. சில நொடிகளில், அவர்கள் தங்கள் இருப்பு விவரங்களை தங்கள் தொலைபேசியில் பெறுவார்கள். எஸ்பிஐ கட்டணமில்லா எண் 09223866666 என்ற எண்ணில் மிஸ்டு கால் மூலம் ஒருவர் தனது எஸ்பிஐ கணக்கு நிலுவைகளைப் பெறலாம்.

எஸ்எம்எஸ் சேவை மூலம் எஸ்பிஐ கணக்கு இருப்பைப் பெற, எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர் கட்டணமில்லா எண் 09223766666 க்கு ‘BAL’ என்ற குறுஞ்செய்தியுடன் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். எஸ்எம்எஸ் சேவை மூலம் எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர் தகவல் ப்[பெற வேண்டுமெனில்,  ‘MSTMT’ என்று டைப் செய்து கட்டணமில்லா எண் 09223766666 க்கு அனுப்பவும்.

பேங்க்ல நகைக்கடன் வாங்க போறீங்களா? அப்போ இதை கொஞ்சம் படிச்சுட்டு போங்க!

இருப்பினும், எஸ்பிஐ எஸ்எம்எஸ் சேவையைப் பெற, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணை எஸ்பிஐ கணக்கில் பதிவு செய்திருக்க வேண்டும். மொபைல் தொலைபேசி எண்ணில் மாற்றம் இருந்தால், அவர்கள் புதிய மொபைல் தொலைபேசியை எஸ்பிஐ எஸ்எம்எஸ் சேவை மூலமாகவும் பதிவு செய்யலாம். அவர்களுக்குத் தேவையானது அதே மொபைல் எண்ணிலிருந்து 09223488888 என்ற எண்ணில் ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் என்பதே. மெசேஜ் ஃபார்மட் “REG <space> கணக்கு எண் என்று இருக்க வேண்டும்.

எஸ்பிஐ ஒரு உறுதிப்படுத்தல் மெசேஜ் அனுப்பும். வாடிக்கையாளர்கள் இப்போது இந்த சேவையைப் பயன்படுத்தலாம் எஸ்பிஐ கணக்கு இருப்பு, மினி அறிக்கை, காசோலை புத்தக கோரிக்கை, மினி ஸ்டேட்மென்ட், கல்வி கடன் வட்டி சான்றிதழ் மற்றும் வீட்டுக் கடன் வட்டி சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்க்கலாம்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sbi alert number check your sbi account balance mini statement through sms banking

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X