இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தனது 45 கோடி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் ஆதார் கார்டுடன் பான் கார்டை மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார்-பான் கார்டை இணைக்க தவறும் பட்சத்தில், வங்கி சேவைகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில், "வாடிக்கையாளர்கள் அனைவரும் இடையூறு இல்லாமல் தொடர்ந்து வங்கிச் சேவைகளை பயன்படுத்த ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
மற்றொரு ட்வீட்டில், ஆதாருடன் பான் இணைக்கப்படாவிட்டால் பான் கார்டு செயலிழந்துவிடும். மேற்கொண்டு பான் கார்டை எந்தவொரு பரிவர்த்தனைக்கும் பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோற்று காரணமாக, ஆதார்- பான் கார்டுகளை இணைப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 2021-வுடன் முடிவடைய இருந்த நிலையில், மார்ச் 31 2022 வரை நீட்டிக்கப்பட்டது.
தற்போது வரை, ஆதாருடன் பான் கார்டை இணைக்காத எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், கீழே உள்ள இரண்டு ஸ்டெப்ஸ்களை பின்பற்றலாம்.
Method 1: ஆன்லைனில் இணைக்கும் வழிமுறை
Step 1:வருமான வரித்துறை இணையதளத்தில் லாகின் செய்ய வேண்டும்.
Step 2:Link Aadhar ஆப்ஷனை கிளிக் செய்ததும், புதிய பக்கத்திற்கு மாற்றப்படுவீர்கள்.
Step 3: பான் மற்றும் ஆதார் விவரங்களை பதிவிட வேண்டும்.
Step 4: உங்கள் ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு மட்டுமே இருந்தால், 'I have only year of birth in aadhaar card' என்ற விருப்பத்தை டிக் செய்யவும்.
Step 5: கேப்ட்சா அல்லது OTP நம்பர் Verification செய்ய வேண்டும்.
Step 6: இறுதியாக, Link Aadhar கிளிக் செய்ய வேண்டும்.
Method 2 - SMS மூலமாக இணைக்கலாம்
Step 1: UIDPAN <12 டிஜிட் ஆதார் எண்><10 டிஜிட் பான் எண்> டைப் செய்ய வேண்டும்.
Step 2: இந்த மெசேஜை 567678/ 56161 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும். அவ்வளவுதான், உங்கள் பான் மற்றும் ஆதார் இணைப்பைப் பெற்றுவிடூவிர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil