SBI alerts; Aadhaar –PAN link, otherwise services will stop: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI), அதன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதில் வங்கி சேவைகளை கடுமையாக பாதிக்கும் முக்கிய செயல்முறை குறித்து, அனைத்து வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் ஒரு முக்கியமான காலக்கெடுவை அறிவித்துள்ளது.
எஸ்பிஐ தனது அனைத்து வாடிக்கையாளர்களையும் தங்கள் பான் (நிரந்தர முகவரி எண்கள்) கார்டுகளை இந்த மாத இறுதிக்குள் தங்கள் ஆதார் அட்டைகளுடன் இணைக்குமாறு கேட்டுக் கொண்டது, இதற்கு மார்ச் 31 ஆம் தேதி வரை காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. இரண்டு ஆவணங்களையும் இணைப்பது அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் கட்டாயம் ஆகும்.
மார்ச் மாத இறுதிக்குள் எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், அவர்களது வங்கிச் சேவைகள் நிறுத்தப்படும். இதன் பொருள், அவர்களால் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க முடியாது, மேலும் அவர்களது டெபிட் கார்டுகள் அல்லது கிரெடிட் கார்டுகளை முன்பு போல் தடையின்றி பயன்படுத்த முடியாது.
பிப்ரவரி முதல் வாரத்தில், எஸ்பிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த காலக்கெடு குறித்து அறிவித்தது. அதில், "எங்கள் வாடிக்கையாளர்கள் எந்தவிதமான சிரமத்தையும் தவிர்க்கவும், தடையற்ற வங்கி சேவையை தொடர்ந்து பெறவும் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்." என பதிவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தும், கடன் கிடைக்கவில்லையா? இதையெல்லாம் செக் பண்ணுங்க!
மேலும், ஆதாருடன் பான் எண் "இணைக்கப்படாவிட்டால், பான் செயல்படாத/செயலற்றதாக மாற்றப்படும் மற்றும் அதனால் பான் எண்ணை குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பயன்படுத்த முடியாது." இதேபோன்ற அறிவிப்பை வங்கி தனது இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது.
எஸ்பிஐ இணையதளத்தில் உள்ள அறிவிப்பின்படி, ஒருவர் கிரெடிட் கார்டுக்கான சேவைகளை தொடர்ந்து பெற விரும்பினால், பான் மற்றும் ஆதாரை இணைப்பது கட்டாயமாகும். வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 139AA இன் கீழ் இரண்டையும் இணைப்பது அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
SBI தனது இணையதளத்தில், “SBI கார்டுக்கு நீங்கள் வழங்கிய பான் எண்ணை, மார்ச் 31ஆம் தேதிக்குள் உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாவிட்டால், 1 ஏப்ரல் 2022 முதல் அது செயல்படாததாகக் கருதப்படும். எனவே, உங்கள் கிரெடிட் கார்டில் தடையில்லா சேவைகளைப் பெற, உங்கள் பான் எண் செயல்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பான் எண்ணை ஆதாருடன் இணைக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ வருமான வரி தாக்கல் செய்யும் போர்ட்டலான https://incometaxindiaefiling.gov.in க்குச் சென்று தங்கள் விவரங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil