scorecardresearch

ஓய்வூதியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… எஸ்பிஐ வழங்கிய புதிய வசதி

வங்கிக்கு செல்லாமல் வீடியோ காலில் ஆயுள் சான்றிதழை சமர்பிக்கும் வழிமுறைகளை பார்த்து தெரிஞ்சுக்கோங்க

ஓய்வூதியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… எஸ்பிஐ வழங்கிய புதிய வசதி

ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற வேண்டுமானால், அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஆயுள் சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் அந்தந்த வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ, முதியோர்களின் சிரமத்தை புரிந்துகொண்டு, நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பித்தில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பென்ஷன் வாங்குபவர்கள் ஆயுள் சான்றிதழை வீட்டில் இருந்தப்படியே வீடியோ கால் மூலமாக சமர்ப்பித்துவிடலாம். இனிமேல், இதற்காக வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் கிடையாது.

வங்கிக்கு செல்லாமல் வீடியோ காலில் ஆயுள் சான்றிதழை சமர்பிக்கும் வழிமுறைகளை பார்த்து தெரிஞ்சுக்கோங்க

  • முதலில் https://www.pensionseva.sbi/ என்ற வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும்.
  • அதில் ‘Video LC’ என்பதைக் கிளிக் செய்து, உங்கள் SBI பென்சன் கணக்கு எண்ணை உள்ளிட வேண்டும்.
  • அந்த கணக்குடன் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி நம்பரை, பதவிட வேண்டும்.
  • அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கவனமாகப் படித்துவிட்டு, ‘Start Journey’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்ததாக, பான் கார்டை கையில் வைத்துகொண்டு, ‘I am ready’ கிளிக் செய்துவிட்டு, வீடியோ அழைப்பைத் தொடங்க அனுமதி கொடுக்க வேண்டும்.
  • SBI அதிகாரி இணைந்தவுடன் உங்கள் வீடியோ அழைப்பு தொடங்கிவிடும். வீடியோ காலின்போது பான் கார்டை காட்டுவது மட்டுமின்றி உங்களை வங்கி அலுவலர் புகைப்படம் எடுத்துகொள்ளவார்.

வீடியோ கால் செயல்முறையில் சிக்கல் ஏற்படும் பட்சத்தில், நீங்கள் வங்கிக்கு தான் நேரடியாக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Sbi allows life certificate submission through video call