அம்ரித் கலாஷ் திட்டத்தின் மூலம் டெபாசிட் செய்வதற்கான கடைசி தேதியை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) நீட்டித்துள்ளது. அம்ரித் கலாஷ் மற்ற ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தின் கீழ், வழங்கப்படும் வட்டியை விட சற்று கூடுதலாக வழங்குகிறது.
இந்த நிலையில், அம்ரித் கலாஷ் டெபாசிட் திட்டத்தை ஆகஸ்ட் 15, 2023 வரை எஸ்.பி.ஐ நீட்டித்துள்ளது. இது வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
400 நாட்கள் அம்ரித் கலாஷ் எஃப்.டி.,களின் கீழ், மூத்த குடிமக்கள் 7.6% வட்டியைப் பெறலாம், அதே நேரத்தில் எஸ்பிஐயின் வழக்கமான வாடிக்கையாளர்கள் தங்கள் டெபாசிட்டுகளுக்கு 7.1% வட்டியைப் பெறலாம்.
எஸ்.பி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்
எஸ்பிஐ மூத்த குடிமக்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 7.5% வரை வட்டி வழங்குகிறது. வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு, வங்கி 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கு குறைவான வைப்புகளுக்கு 7% வரை வட்டி வழங்குகிறது.
மேலும், எஸ்பிஐ, சர்வோத்தம் (அழைக்க முடியாத) உள்நாட்டு சில்லறை டெபாசிட்டுகளை ரூ. 15 லட்சத்துக்கு மேல் முதல் ரூ. 2 கோடிக்கும் குறைவாக வழங்குகிறது.
- 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்: பொது மக்களுக்கு 6.8% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.30% வட்டி கிடைக்கும்.
- 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்: பொது மக்களுக்கு 7% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.50% வட்டி கிடைக்கும்.
- 3 வருடங்கள் முதல் 5 வருடங்களுக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்: வங்கி பொது மக்களுக்கு 6.5% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7% வட்டி கிடைக்கும்.
- 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்: வங்கி பொது மக்களுக்கு 6.5% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டி வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“