ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் எளிதில் அணுகும்வகையில் 400 நாள்கள் காலம் கொண்ட அம்ரித் கலாஷ் என்ற புதிய ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டத்தில் பொதுமக்களுக்கு 7.1 சதவீதம் வட்டியும், மூத்தக் குடிமக்களுக்கு 7.6 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
2023 ஏப்ரலில் மறுஅறிமுகமான இந்தத் திட்டம் ஜூன் 30ஆம் தேதிவரை செல்லுபடியாகும் எனக் கூறப்பட்டது. தொடர்ந்து, திட்டம் ஆகஸ்ட் 15ஆம் தேதிவரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிக்ஸட் டெபாசிட்டை புக் செய்வது எப்படி?
இந்த ஃபிக்ஸட் டெபாசிட்டை எஸ்பிஐ வங்கி கிளை, ஆன்லைன் அல்லது யோனோ செயலி மூலம் தொடரலாம். இந்த ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 15ஜி அல்லது 15 ஹெச் மூலமாக வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யலாம்.
ஒருவேளை ஃபிக்ஸட் டெபாசிட்டை முதிர்ச்சிக்கு முன்பே பெற நேர்ந்தால் குறிப்பிட்ட அபராதம் மற்றும் வட்டி குறைப்பு காணப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“