எஸ்.பி.ஐ மற்றும் ஐ.டி.பி.ஐ வங்கி சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த, எஸ்.பி.ஐயின் அம்ரித் கலாஷ் மற்றும் ஐடிபிஐயின் அம்ரித் மஹோத்ஸவ் உள்ளிட்ட திட்டங்கள் ஆக.15ஆம் தேதியோடு நிறைவு பெறகின்றன.
400 நாள்கள் திட்டம்
இதன்படி எஸ்.பி.ஐ அறிமுகப்படுத்திய அம்ரித் கலாஷ் திட்டத்தின் காலக்கெடு 400 நாள்கள் ஆகும். இந்தத் திட்டத்தில் சாதாரண குடிமக்களுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
மூத்தக் குடிமக்களுக்கு கூடுதலாக 0.50 சதவீதம் வட்டி வழங்கப்படும். இது மார்க்கெட்டில் உள்ள சக திட்டங்களுடன் ஒப்பிடுகையில் நல்ல திட்டமாக பார்க்கப்படுகிறது.
ஐடிபிஐ அம்ரித் மஹோத்ஸவ் எஃப்.டி
ஐடிபிஐ வங்கி வழங்கும் அம்ரித் மஹோத்ஸவ் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் 375 நாள்கள் கொண்டது ஆகும்.
இந்தத் திட்டத்தில் மூத்தக் குடிமக்களுக்கு 7.60 சதவீதம் வட்டியும், சாதாரண மக்களுக்கு 7.10 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
இதேபோல் 444 நாள்கள் காலக்கெடு கொண்ட மற்றொரு திட்டமும் உள்ளது. இந்தத் திட்டத்தில் சாதாரண குடிமக்களுக்கு 7.15 சதவீதம் வட்டியும், மூத்தக் குடிமக்களுக்கு 7.65 சதவீதம் வட்டியும் வழங்கப்படும்.
இந்த 3 சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களும் ஆக.15ஆம் தேதியோடு முடிவுக்கு வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“