இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 2022 தீபாவளிக்கு முன்னதாக நிலையான வைப்பு விகிதங்களை 80 அடிப்படைப் புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது.
இந்த விகிதங்கள் ரூ. 2 கோடிக்குக் குறைவான நிலையான வைப்புகளுக்குப் பொருந்தும். இது, அக்டோபர் 22, 2022 சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.
அந்த வகையில், 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான சில்லறை டெர்ம் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் 4 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்கள் 5.25 சதவீதம் வட்டியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய வட்டி விகிதங்கள் இங்கே
கால அளவு | பழைய வட்டி | புதிய வட்டி | மூத்த குடிமக்கள் பழைய வட்டி | புதிய வட்டி |
7 முதல் 45 நாள்கள் | 3.00 | 3.00 | 3.50 | 3.50 |
46 முதல் 179 நாள்கள் | 4.00 | 4.50 | 4.50 | 5.00 |
180 முதல் 210 நாள்கள் | 4.65 | 5.25 | 5.15 | 5.75 |
211 நாள்கள் முதல் ஓராண்டு | 4.70 | 5.50 | 5.20 | 6.00 |
ஓராண்டு முதல் 2 ஆண்டுக்குள் | 5.60 | 6.10 | 6.10 | 6.60 |
2 ஆண்டு முதல் 3 ஆண்டுக்குள் | 5.65 | 6.25 | 6.15 | 6.75 |
3 ஆண்டு முதல் 5 ஆண்டுக்குள் | 5.80 | 6.10 | 6.30 | 6.60 |
5 ஆண்டு முதல் 10 ஆண்டுக்கு மேல் | 5.85 | 6.10 | 6.65 | 6.90 |
மூத்த குடிமக்களைப் பொறுத்தமட்டில், 7 நாட்கள் முதல் 45 நாள்கள் வரையிலான காலவரையறைகள் தவிர, கிட்டத்தட்ட அனைத்து வகையான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கும் வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ ஏற்கனவே 6.1 சதவீத வட்டி விகிதத்தில் ‘1000 நாட்கள்’ என்ற குறிப்பிட்ட காலத்தை ஆகஸ்ட் 15 முதல் 75 நாட்களுக்கு வழங்குகிறது.
உலகம் முழுக்க எஸ்பிஐ 22,294 கிளைகளுடன் இயங்கிவருகிறது. நாடு முழுக்க 65,561 ஏடிஎம்கள் உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil