Advertisment

அதிக வட்டி தரும் எஸ்பிஐயின் ப்ளாட்டினம் டெபாசிட் ஸ்கீம்; விவரங்கள் இதோ…

SBI announces new platinum deposit scheme details here: அதிக வட்டி தரும் எஸ்பிஐயின் ப்ளாட்டினம் டெபாசிட் ஸ்கீம்; முழு விவரங்கள் இதோ…

author-image
WebDesk
New Update
SBI new rules, SBI cash withdrawal

இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி, பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய பிளாட்டினம் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த திட்டத்தை எந்த எஸ்பிஐ கிளை அல்லது எஸ்பிஐ யோனோ ஆப் மூலம் பெறலாம்.

Advertisment

இந்த செய்தியை எஸ்பிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. எஸ்பிஐயின் ட்வீட்டில், "இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை பிளாட்டினம் டெபாசிட்களுடன் கொண்டாட வேண்டிய நேரம் இது. எஸ்பிஐ உடன் டேர்ம் டெபாசிட் மற்றும் சிறப்பு டேர்ம் டெபாசிட்களுக்கான பிரத்யேக நன்மைகள். 14 செப்டம்பர் 2021 வரை இந்த சலுகை செல்லுபடியாகும்." என்று பதிவிட்டுள்ளது.

புதிய எஸ்பிஐ பிளாட்டினம் வைப்புத் திட்டம் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 14, 2021 வரை கிடைக்கும், மேலும் வாடிக்கையாளர்கள் பரந்த எண்ணிக்கையிலான விருப்பங்களை தேர்வு செய்யலாம்.

பின்வரும் கால வைப்புத்தொகையிலிருந்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்:

  1. பிளாட்டினம் 75 நாட்கள்
  2. பிளாட்டினம் 525 நாட்கள்
  3. பிளாட்டினம் 2250 நாட்கள்

டெபாசிட் செய்வதற்கான தகுதிகள்

என்ஆர்இ மற்றும் என்ஆர்ஓ டேர்ம் டெபாசிட் (<2 கோடி) உட்பட உள்நாட்டு சில்லறை டேர்ம் டெபாசிட் (டிஆர்டிடி)

புதிய மற்றும் புதுப்பிப்பு டெபாசிட்

டேர்ம் டெபாசிட் மற்றும் சிறப்பு டேர்ம் டெபாசிட்

என்ஆர்இ டெபாசிட்களுக்கான தகுதிக்காலம் 525 நாட்கள் மற்றும் 2250 நாட்கள் மட்டுமே.

வட்டி

75 நாட்கள் – 3.95%

525 நாட்கள் – 5.10%

2250 நாட்கள் – 5.55%

இவ்வாறு டெபாசிட் காலத்திற்கு ஏற்ப வட்டி அதிகமாக கிடைக்கிறது.

டேர்ம் டெபாசிட் - மாதாந்திர அல்லது காலாண்டு வைப்புத்தொகையில் மட்டுமே பெற முடியும்

சிறப்பு டேர்ம் டெபாசிட் – முதிர்வின் போது கிடைக்கும்.

வட்டி, டிடிஎஸ், வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கப்படும்.

2 கோடிக்கும் குறைவான டிஆர்டிடி மற்றும் என்ஆர்இ மற்றும் என்ஆர்ஓ டேர்ம் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் மாறாமல் உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Deposit Scheme Sbi Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment