பண்டிகை காலத்தை முன்னிட்டு பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. இந்த திட்டங்கள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
"கார் கடன், நகைக் கடன் மற்றும் தனிநபர் கடனுக்கான சிறப்பு சலுகைகளுடன் பண்டிகை கொண்டாட்டங்களை எஸ்பிஐயிலிருந்து தொடங்கவும். இன்றே தொடங்கவும்! இப்போதே விண்ணப்பிக்கவும்: sbiyono.sbi." என எஸ்பிஐ ட்வீட் செய்துள்ளது.
எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கார் லோன்-ஐ ஒரு லட்சம் ரூபாய் கடனை வெறும் 1,539 ரூபாய்க்கு அளிக்கிறது. இதேபோல் பர்சனல் லோன்-ஐ ஒரு லட்சம் ரூபாய் கடனை 1,832 ரூபாய்க்கும் அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்தச் சிறப்பு வட்டி விகிதம் பண்டிகை காலத்திற்காகப் பிரத்தியேகமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் தங்க நகை கடனை வெறும் 7.5 சதவீத வட்டியில் அளிக்கிறது.
இதேபோல் எஸ்பிஐ வங்கி மிகப்பெரிய வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய வர்த்தக இலக்குடன் ஹோம் லோன்-ஐ வெறும் 6.7 சதவீதத்திற்கு அளிக்கிறது.
தற்போது ஹோம் லோன்-க்கு சுமார் 45 அடிப்படை புள்ளிகள் குறைவாக அளிக்கப்படும் காரணத்தால் 75 லட்சம் ரூபாய் அளவிலான 30 வருட கடனுக்குச் சுமார் 8 லட்சம் ரூபாய் வரையில் சேமிக்க முடியும். இது மிகப்பெரிய சேமிப்பு. இதேபோல் மாத சம்பளம் இல்லாதோருக்கு 0.15 சதவீதம் அதிகமான வட்டியில் அதாவது 6.85 சதவீத வட்டியில் ஹோம் லோன் அளிக்கப்படுகிறது. மேலும் வட்டி விகிதம் நிர்ணயம் செய்வதில் சிபில் ஸ்கோர் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.
இவை அனைத்திற்கும் மேலாக எஸ்பிஐ வங்கியில் தற்போது அனைத்து கடன்களையும் ஆன்லைன் தளத்திலேயே விண்ணப்பிக்கும் சேவை கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் எஸ்பிஐ வங்கியில் கடன் வாங்க விருப்பப்படும் அனைவரும் https://sbiyono.sbi/index.html என்ற இணையத் தளத்தில் பதிவு செய்யலாம். இதேபோல் பல சேவைகள் யூனோ செயலியிலும் உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil